(Reading time: 5 - 10 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

"இவ பேரு நந்திதா அத்தை. என்னோட காலேஜ்ல படிச்சவ. ரொம்ப க்ளோஸ் ஃப்ரென்ட். என்னோட பெஸ்ட் ஃப்ரென்ட்ன்னு வச்சுக்கோங்களேன். எங்க கல்யாணத்துக்கு வந்திருந்தா, உங்களுக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியலை..."

   

"ம்ம்ம்... கல்யாணத்துக்கு வந்திருந்தாளா? ம்ம்ம்.... அந்த மஜந்தா சாரீ கட்டிட்டு மல்லி பூ நிறைய வச்சுட்டு வந்திருந்தாளே அவளா?"

   

காமாட்சியின் நினைவாற்றலை வியந்தப்படி, அவசரமாக யோசித்த துளசி,

   

"இல்லை அத்தை அது அருணா! அவளும் என் ஃப்ரென்ட் தான்," என்றாள்.

   

"அப்போ அந்த சந்தன கலர்ல வந்த பொண்ணா?"

   

"இல்லை இல்லை அவ மனுஜா, மலையாளி ஸ்டைல் சாரீல வந்தவளை தானே சொல்றீங்க?"

   

"ஆமாம்... இந்த நந்திதா என்ன சாரீ கட்டி இருந்தா???"

   

"க்ரீன் கலர் சாரீ, மெரூன் பார்டர்... மைசூர் சில்க் சாரீ..."

   

"ஓ ஃப்ளீட் வைக்காம ஃப்ரீயா சிங்கிள் ப்ளீட் வச்சிருந்தா தானே?"

   

"அம்மாடியோ, எப்படி அத்தை இதெல்லாம்? கலக்குறீங்க போங்க! அவளே தான்!"

   

"இதுல ஆச்சர்யப் பட என்ன இருக்கு? எனக்கு ஒரே மகன்! அப்பப்போ அவனோட கல்யாண ஆல்பம் எடுத்து பார்ப்பேன்... இவங்க எல்லோரும் உன் பக்கத்துல நிறைய போட்டோல கண்ணுல படுவாங்க...."

   

"இது தானா ரகசியம், நான் கூட மூணு வருஷம் முன்னாடி பார்த்ததை ஞாபகம் வச்சிருக்கீங்கன்னு நினைச்சேன்."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.