“நாம எதுக்கும் லேப்க்கு போய் டெஸ்ட் செய்து கன்ஃபார்ம் செய்ததுக்கு அப்புறம் அவருக்கு சொல்வோமே?”
“ஹுஹும்.... நோ சான்ஸ் கீதா அக்கா! இது எல்லாம் முதல்ல தெரிய வேண்டிய ஆள் ராஜீவ் தான்...”
இந்து சொன்னதுடன் நிறுத்தாமல், கையில் இருந்த மொபைலை எடுத்து ராஜீவின் எண்ணை அழுத்தி, கீதாவிடம் கொடுத்தாள்.
“இந்தாங்க, ராஜீவ் கிட்ட உடனே கிளம்பி இங்கே வர சொல்லுங்க...”
கீதா கெஞ்சலாக பார்க்கவும்,
“கஷ்டம் கீதா அக்கா! பாவம் ராஜீவ்,” என அலுத்துக் கொண்ட இந்து, மறு பக்கம் ராஜீவின் “ஹலோ,” கேட்கவும், அவசரமாக பேசினாள்.
“ஹலோ ராஜீவ், நீங்க பிஸியா?”
“ஆமா, இந்து! இன்னைக்கு இரண்டு முக்கியமான மீட்டிங் இருக்கு... ப்ரிப்பேர் செய்யனும், ஆனால் பரவாயில்லை சொல்லு, என்ன விஷயம்...”
“எல்லா மீட்டிங்கையும் மூட்டைக் கட்டி வச்சுட்டு உடனே கிளம்பி நம்ம ராதா கிருஷ்ணா மஹால் வாங்க, எங்கே இருக்குன்னு உங்களுக்கு தெரியும் தானே?”
“எனக்கு தெரியுறது எல்லாம் இருக்கட்டும், என்ன விஷயம்ன்னு சொல்லு இந்து. இது
{/f90filter}
விளையாடுற நேரமில்லை...”
“நானா விளையாடுறேன்? உங்க கீதாவை டாக்டர் கிட்ட அழைச்சிட்டுப் போகனும்....”
இந்து அதை முழுவதுமாக சொல்லி முடிக்கும் முன்பே,