தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 07 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"வாழ்க்கையில எப்படி எல்லாம் மாற்றம் வருதுன்னு யோசிச்சுப் பார்த்தால் நம்பவே முடியலை அத்தை... நந்திதா ஃபேமிலி ரொம்ப கலகலப்பான ஃபேமிலி. ஒரே பொண்ணுன்னு அவளுக்கு ரொம்ப செல்லம்... அவங்க அம்மா அப்பா அவ்வளவு ஃப்ரென்ட்லியா இருப்பாங்க... நந்துவும் கூட அப்படி தான்," என்றாள் துளசி பெருமூச்சுடன்!
"உனக்கும் நந்திதாவோட அப்பா அம்மாவை தெரியுமா?" என வினவினாள் காமாட்சி.
"ம்ம்ம்... நந்து ஹாஸ்டல்ல தங்கி படிச்சா, அதனால அவங்க அப்பப்போ வருவாங்க... சென்னைல வந்து ஒரு வாரம் போல தங்கி இருந்துட்டுப் போவாங்க... அவங்களை எங்க செட்ல எல்லோருக்குமே நல்லா தெரியும்..."
"ஓ!"
"நந்து ஒரு தடவை க்ரூப் ஸ்டடி செய்ய எங்க வீட்டுக்கு வந்திருந்தா. மறுநாள் அவளுக்கு ப்ராக்டிகல் எக்ஸாம், திடீர்னு அப்பாக்கு ஃபிட்ஸ் போல வந்திருச்சு... எல்லோருமே ரொம்ப பயந்துட்டோம்... அப்பா மயக்கம் ஆகிட்டார்... அம்மாக்கும் எனக்கும் கையும் ஓடலை, காலும் ஓடலை... மத்த ஃப்ரென்ட்ஸ் கூட ஸ்டன் ஆகிட்டாங்க... நந்து தான் ஆம்புலன்ஸ் வர வச்சு ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போனாள்... அங்கேயும் கூட பணம் கட்ட அது இதுன்னு எல்லாம் அவ ஹெல்ப் தான்... நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம்... ஃபர்ஸ்ட் அட்டாக்குன்னு டாக்டர் சொன்னப்போ... இப்போ நினைச்சா கூட பயமா இருக்கு அத்தை..."
"ப்ச்... அது தான் அப்பா இப்போ நல்லா இருக்காரே அப்புறம் என்ன?"
"ஆமாம், ஆனால் அன்னைக்கு நந்து இல்லாமல் நாங்க ஏதாவது செஞ்சிருப்போமான்னு தெரியலை. மறுநாள் கூட எக்ஸாம் முடிஞ்ச உடனே நேரா ஹாஸ்பிட்டல் வந்துட்டா...."
"படிக்காமல் போனாளே எக்ஸாம் என்ன ஆச்சு?"
"அவ எல்லாம் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குற ஆளு! அதெல்லாம் நல்லா தான் செய்தா... ஆனால் அன்னையில இருந்து நாங்க இரண்டு பேரும் ரொம்ப திக் ஃப்ரென்ட்ஸ்... இப்போவும் அவ என்