(Reading time: 7 - 13 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

"அடடா!"

   

"இதுல ஆச்சர்யம் எதுவுமில்லை அத்தை. அங்கிளுக்கு ஆன்ட்டி மேல அவ்வளவு அன்பு.... விஷயம் தெரிஞ்ச முதல் நாள்ல இருந்தே ரொம்ப டல்லா தான் இருந்தார்... ஹும்.... அப்புறம் நந்து அவங்க கம்பெனியை வித்து அதுல வந்த பணத்தை எல்லாம் ஆன்ட்டிக்கே செலவு செஞ்சா... ஆனாலும் அந்த கொலைக்கார நோய் கிட்ட இருந்து அவங்களை காப்பாத்த முடியலை..."

   

"பாவம் தான்ப்பா உன் ஃப்ரென்ட்.... எப்படி இருந்த குடும்பம்... கேட்கும் போதே கஷ்டமா இருக்கு..."

   

"எனக்கும் கூட நினைக்கும் போதெல்லாம் கஷ்டமா இருக்கும் அத்தை... ஆனால் நந்துவை பார்த்தீங்கன்னா, நீங்க நம்பவே மாட்டீங்க..."

   

"ஏன்?"

   

"அவ முகத்தைப் பார்த்தால் இந்த உலகத்திலேயே சந்தோஷமான பொண்ணு அவ தான்னு உங்களுக்கு தோணும்... எப்போதும் சிரிச்சுட்டே கல கலன்னு பேசிட்டே இருப்பா... நீங்க பார்க்க தானே போறீங்க! நான் மட்டும் அவளைப் பத்தி உங்க கிட்ட சொல்லி இருக்கலைன்னா, அவ ரொம்ப சந்தோஷமா இருக்குறதா மத்தவங்க எல்லோரையும் போலவே நீங்களும் நினைச்சிருப்பீங்க..."

   

"வித்தியாசமான பொண்ணு போலருக்கு!"

   

"ஆமாம்! கொஞ்சம் கிராக்கு அவ... ஆனால் ரொம்ப ஸ்வீட்... ரொம்ப நல்ல பொண்ணு... சில பேர் தலை கணம் பிடிச்சவ.. இதயமே இல்லாதவன்னு எல்லாம் சொல்லுவாங்க..."

   

"சொல்லுறவங்களுக்கு என்ன சொல்லிட்டுப் போகட்டும்...."

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.