பக்கத்துல இல்லைனாலும் அதே போல தான்..."
"அவ்வளவு க்ளோஸ் ஃப்ரென்டுன்னா நீ ஏன் அவளை வீட்டுக்கு கூப்பிட்டதில்லை??? அவ அம்மா இறந்த பிறகாவது சென்னைக்கு வர அவளை கூப்பிட்டு இருக்கலாமே?"
"நிறைய தடவை கூப்பிட்டேன் அத்தை... அவ ஒரு டைப்... மனசுல இமய மலை சைஸ்ல கவலை இருந்தாலும் முகத்துல ஒரு சிரிப்பை வச்சுட்டு ஒன்னுமே இல்லைன்ற மாதிரி சுத்துற டைப்..."
“ஓஹோ...”
"நான் நல்லா தான் இருக்கேன், வரலைன்னு சொல்லிட்டா..." என்றாள் துளசி யோசனையுடன்!
❀✿❀✿❀✿
காமாட்சியும், கையில் குழந்தையுடன் துளசியும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தார்கள்.
வழியில் இருந்த அறவிப்பு பலகையை கவனித்த துளசி, சதாப்தி எக்ஸ்ப்ரஸ் விபரம் பார்த்து விட்டு, "ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட்டாம்... ச்சே..." என அலுத்துக் கொண்டாள்.
"நான் உன் கூட வந்ததும் நல்லதா போச்சு... வா அப்படி உட்காருவோம்," என்றாள் காமாட்சி.
துளசியும் ஏற்றுக் கொள்ள, இருவரும் குழந்தையுடன் காலியாக இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள்.
சில நிமிடங்கள் மருமகளின் கையில் இருந்த பேத்தியை செல்லம் கொஞ்சி செலவிட்ட காமாட்சி,
"ஏன் துளசி உன் ஃப்ரென்ட் நந்திதா இன்னும் கல்யாணம் செய்துக்கலை? அவ அம்மா இருந்தப்போவே கல்யாணம் செய்து வச்சிருக்கலாமே?" எனக் கேட்டாள்.