தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 12 - சசிரேகா
ஒரு வாரம் கழித்து மீண்டும் பரந்தாமன் பூங்கொடியை தேடி வந்தார் அதற்குள் அவள் ஒரு வேலையை தேடிக் கொண்டாள். வேலைக்காக பரபரவென தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த நேரம் வழி மறித்தார் அவரைக் கண்டதும் நொந்துப் போனாள்
”ஐயா என்னங்கய்யா இப்படி வந்து நிக்கறீங்க”
”என் மகனோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, தயவு செய்து வந்து அவனை பாரு, நீ அவன்கிட்ட பேசினா எல்லாம் சரியாயிடும்” என சொல்ல அவளோ
”இல்லை அது சரியா வராதுங்கய்யா” என சொல்ல உடனே அவர் கைகூப்பி கண்ணீருடன்
”என் பையனை உன்னாலதான் காப்பாத்த முடியும் வாம்மா” என கெஞ்ச அதில் அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு திருப்பத்தில் பூங்கொடி தனக்கு பின்னால் 10 அடி தொலைவில் ஈஸ்வரன் வருவதைக் கண்டுக் கொண்டு நிம்மதியானாள்.
பரந்தாமனது பங்களா வரவும் அவரின் வண்டி கேட் உள்ளே சென்றது, அதைத் தொடர்ந்து பூங்கொடியின் வண்டியும் உள்ளே சென்றது. அதன் பின் கேட் மூடப்பட்டது, ஈஸ்வரனோ அந்த கேட் முன் வண்டியை நிப்பாட்ட வாட்ச்மேன் விசாரிக்கலானான்
”நான் உள்ள போகனும்”