"ஓ!"
"அப்புறம், இந்த கல்யாணம் நின்னு போச்சு..."
"பாவம் உன் ஃப்ரென்ட்..."
"பாவம்ன்னு சொல்ல முடியாது. நந்து தப்பிச்சிட்டான்னு வேணா சொல்லலாம்... அந்த சந்தோஷ் அந்த பொண்ணையும் கல்யாணம் செய்துக்கலை... அவ அப்பா கிட்ட பணம் வாங்கிட்டு ஓடிப் போயிட்டான்..."
"பிழைக்க தெரிஞ்சவன்..."
"நீங்க தான் மெச்சிக்கனும்..."
"சரி, அதுக்காகவா இவ கல்யாணம் செய்துக்காம இருக்கா?"
"அதுவும் ஒரு காரணம்... அதுக்கு அப்புறம் இன்னும் சில பிரச்சனைகள்... கல்யாணம் நின்னு போன சில நாளிலேயே நந்துவோட அம்மாக்கு கர்ப்பப்பை கேன்சர் இருக்கிறதை கண்டுப்பிடிச்சாங்க..."
"யுட்ரஸ் எடுத்துட்டா காப்பாத்திடலாம்னு சொல்றாங்களே?"
"ஆன்ட்டிக்கு கேன்சர்ன்னு கண்டுப் பிடிச்சப்போவே நோய் ரொம்ப பரவி இருந்தது... அது மாதிரி யுட்ரஸ் எடுத்தாலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க... பணம் செலவு செய்தால் அவங்களுடைய வாழ் நாளை கொஞ்ச நாள் அதிக படுத்தலாம்னு சொன்னாங்க..."
"பாவம்...."
"இந்த விஷயம் தெரிஞ்ச கொஞ்ச நாளிலேயே அங்கிள் ஹார்ட் அட்டாக்கில இறந்துட்டார்..."