துளசி பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
மருமகளை ஒரு பார்வை பார்த்த காமாட்சி,
"உன் ஃப்ரென்ட் பத்தி தெரிஞ்சுக்க கேட்டேன், உனக்கு சொல்ல பிடிக்கலைனா வேண்டாம் விடு," என்றாள்.
"அப்படி இல்லை அத்தை... நந்து வாழ்க்கை எப்படி மாறிப் போச்சுன்னு நினைச்சுப் பார்க்கிறேன்... அவளை நான் காலேஜ்ல மீட் செய்தப்போ அவ்வளவு சந்தோஷமா இருப்பா... நல்ல குடும்பம், அவ மேல உயிரையே வச்சிருக்க அம்மா, அப்பா... தேவைக்கு அதிகமாகவே சொத்து..."
"அப்புறம் என்ன ஆச்சு?"
"வேற என்ன, காதல்! காலேஜ்ல இவர் கூட படிச்ச சந்தோஷ்ன்னு ஒருத்தனை லவ் செய்தா."
"ஓ! அப்புறம் ஏன் அவனை கல்யாணம் செய்துக்கலை?"
"அது ஒரு பெரிய கதை அத்தை... சந்தோஷ் சைட் ரொம்ப நல்ல ஃபேமிலின்னு எல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும் நந்திதா வீட்டுல அவளுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க... அவ அம்மாக்கு சந்தோஷை பிடிக்கவே இல்லை.. என் கிட்ட கூட நேராவே பிடிக்கலைன்னு சொல்லி இருக்காங்க... ஆனால் அங்கிள்க்கு ஆன்ட்டி மேல ரொம்பவே அன்பிருந்தாலும் எப்போவும் பொண்ணு வார்த்தை தான் வேத வாக்கு... கல்யாணத்துக்கு நாள் எல்லாம் கூட குறிச்சாங்க..."
"அப்புறம்?"
"அந்த சந்தோஷ்க்கு அங்கிள் ரெகமன்ட் செய்து வேலை வாங்கி கொடுத்தார்... போன இடத்துல அந்த மன்மதருக்கு அந்த கம்பெனி ஓனர் பொண்ணோட அடுத்த லவ்வு..."