“ஏன் கீதாக்கு உடம்புக்கு என்ன?” என்று பதற்றப் பட்டான் ராஜீவ்.
“இவ்வளவு சீரியஸா கேட்க எதுவுமில்லை சீனியர் சார்... சந்தோஷமான விஷயம் தான்... கீதா அக்கா மூலமா உங்களுக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு. கொஞ்சம் மூளையை யூஸ் செஞ்சு என்னன்னு கண்டுப்பிடிச்சிட்டு அரை மணி நேரத்துக்குள்ளே இங்கே வந்து சேருங்க... இல்லன்னா, நாங்க இரண்டுப் பேரும் இங்கே இருந்து கிளம்பிடுவோம்...”
அத்தோடு ஃபோனை கட் செய்து வைத்த இந்துவை பார்த்து முறைத்தாள் கீதா!
“உனக்கு அறிவிருக்கா? பாவம் அவர் என்னவோ ஏதோன்னு கவலைப் பட போறார்...”
“இதோ பாருடா, இவங்களும் பேச மாட்டாங்காலாம், நான் பேசினாலும் தப்பாம்!”
இந்துவை பார்த்து மீண்டும் ஒரு தடவை முறைத்து விட்டு, அவசரமாக தன்னுடைய மொபைலில் இருந்து கணவனை அழைத்தாள் கீதா.
“ஹலோ!”
அந்த பக்கம் ராஜீவ் என்ன சொன்னானோ கீதா அழகாக வெட்கப் பட்டாள். அதை பார்த்து ரசித்து விட்டு, அவர்களுக்கு ப்ரைவசி இருக்கட்டும் என்று கீதாவின் பக்கம் இருந்து பார்வையை திருப்பினாள் இந்து.
அவள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, ராஜீவிடம் பேசி முடித்து விட்டு இந்துவை அழைத்தாள் கீதா! அவளின் முகம் பளிச
{/f90filter}
்சென பளபளத்தது!!!
“எப்படி கீதா அக்கா அது, இங்கே கல்யாணத்துக்கு வர வரைக்கும் சொல்லாம மறைச்சு வச்சிருந்தீங்க?”
கீதா பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.