(Reading time: 6 - 12 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அவள் எதிர்பார்த்ததுப் போலவே அவன் முகத்தில் கோபத்தின் சாயல்கள் தோன்றியது.

   

“ஒரு ஃபோன் செஞ்சு இன்னைக்கு வர முடியாதுன்னு அவங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே?”

   

“ஏன் சொல்லனும்?”

   

“இது என்ன கேள்வி? அவங்க வீட்டுக்கு போறது இப்போ ரொம்ப முக்கியமா?”

   

“உங்களுக்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், எனக்கு முக்கியம் தான்.”

   

“இந்து! என் கோபத்தை அதிகப் படுத்தாதே!”

   

“இதுல நீங்க கோபப்பட என்ன இருக்கு? பிரசாத் எனக்கு நல்ல ஃப்ரென்ட். அவங்க வீட்டுல மத்தவங்க எல்லோருமே எனக்கு ரொம்ப பழக்கமானவங்க...”

   

“ஸோ, உன்னால் என்னோட வர முடியாது, உன் பாய் ஃப்ரென்ட் வீட்டுக்கு போறது தான் முக்கியம்?”

   

‘உன் ஆஃபீஸ்ல பார்ட்டி வச்சப்போ என் கிட்ட சொல்லாம ஏமாத்தி, சதி செஞ்சு திட்டு வாங்க வச்சவன் நீ தானே, நான் ஏன் உன்னோட வரணும்...’ என மனதில் நினைத்த இந்து அதை வார்த்தைகளாய் சொல்லவில்லை...

   

மாறாக, ஒன்றும் சொல்லாமல் கணவனை பார்த்து முறைத்தாள்... இல்லை, இல்லை... முறைப்பதுப் போல பார்த்தாள்!!!

   {/f90filter}

>

சஞ்சீவ் கோபத்தை கட்டுபடுத்த சிரமபடுவது புரிந்தது. ஆனால், என்ன நினைத்தானோ,

   

“ஏதோ செய்...” என்று சொல்லி விட்டு, அவர்கள் அறையை விட்டு வெளியே சென்றான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.