அவன் அங்கே இருந்து போனப் பிறகும் சில நிமிடங்கள் இந்து அங்கேயே நின்றிருந்தாள்!
கோபத்தில் எதையாவது சொல்லி அவளை புண்படுத்தி விட கூடாது என்று தான் சஞ்சீவ் அவனை கட்டுப்படுத்தி கொண்டு அங்கிருந்து சென்றான் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை... அவள் சில நிமிடங்களுக்கு முன் அவனுக்காக மனதில் நினைத்ததை சொல்லாமல் விட்டதுப் போல அவனும் செய்கிறான்!
ஏனென்றால், அவளைப் போலவே அவனும் அவள் மீது அதிக அன்பை வைத்திருக்கிறான்!!!
இந்துவின் மனதில் முன்பிருந்ததை விட உற்சாகம் அதிகமானது!
கணவனின் அன்பை நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது. கிட்டத்தட்ட பத்து, பதினைந்து நிமிடங்கள் அங்கேயே குறுக்கும் நெடுக்குமாக உலாவி சஞ்சீவை பற்றி நினைத்து நின்றிருந்தவள், தன்னுணர்வு பெற்று, மனதை அமைதியாக்கி கொண்டு, மெதுவாக கதவை நோக்கி சென்றாள். சாத்தி இருந்த கதவை திறந்தவள், திகைத்துப் போனாள்!!
அங்கே ஒரு மந்தகாச புன்னகையோடு சஞ்சீவ் நின்றிருந்தான்.
கதவை திறக்கும் எண்ணத்துடன் கையை நீட்டி இருந்தவன், இந்துவை பார்த்ததும் கையை நேராக்கி கொண்டு, “என்ன டைரக்டர் மேடம், உங்க விருப்பம் போலவே எவ்வளவு நேரம் கதை போறது, நான் கொஞ்சம் ஃப்ளோவை மாத்தவா?” என்றான் குறும்புடன்!!!
சஞ்சீவின் குறும்பு கலந்த சிரிப்பும், பேச்சும் இந்துவின் தலையை சுற்ற வைத்தது ஒரு பக்கம் என்றால், அவன் சொன்னது, இந்துவை இன்னும் குழப்பியது!
அவனுக்கு உண்மை தெரிந்து வி
{/f90filter}
ட்டதா???
இந்த எதிர்பாராத திருப்பத்தில் இந்து வாயடைத்துப் போனாள்.
அதிர்ந்து நின்றவளை பார்த்தப் படி, ஒரு புன்னகையோடு அறையின் உள்ளே வந்த சஞ்சீவ்,