அவனாகவே கதவை மூடி தாழிட்டான். பின் மனைவியின் பக்கம் திரும்பி,
“இன்னும் நீ என்னோட ஷாக் ட்ரீட்மென்ட்ல இருந்து வெளியே வரலையா? நான் வேணும்னா ஹெல்ப் செய்யவா?” என்றான் குறும்பாக!
கண்களில் மின்னும் சிரிப்புடன் அவன் கேட்டபடி அருகில் வரவும், இந்து அனிச்சை செயலாக பின்னே நகர்ந்தாள்.
“எவ்வளவு நாள் தான் நானும் உன் ப்ளான் படியே நடக்குறது? இப்போ தான் விஷயம் என்னன்னு கண்டுபிடிச்சேன். இந்த விஷயத்துக்காக தேவையே இல்லாம அவ்வளோ காஸ்ட்லியான உன் மூளையை யூஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன? எத்தனை நாள் வேஸ்டா போச்சு டார்லிங்...”
ஓரளவிற்கு அதிர்ச்சியில் இருந்து விடுபட தொடங்கி இருந்த இந்து,
“நீங்க சொல்றது எதுவும் புரியலையே...” என்று தொடங்கவும், சஞ்சீவ் இன்னுமா என்பது போல் ஒரு பார்வை பார்த்தான்! அதை கவனித்து விட்டு,
“நிஜமாவே உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா?” என்றாள் இந்து.
“யெஸ் யெஸ் யெஸ்! நாளைக்கு என் பிறந்தநாள் அதுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான் இந்த பில்ட் அப்? சரியா?”
இந்துவின் முகத்தில் அப்பட்டமாக ஏமாற்றம் தெரிந்தது! அதைப் பார்த்தே விடையை தெரிந்துக் கொண்ட சஞ்சீவ், மனதில் இருந்த பாரம் மொத்தமாக நீங்கியவனாக மகிழ்ச்சியுடன் சிரித்தான். பின், இந்துவின் அருகில் சென்று அவளை இழுத்து, அணைத்துக் கொண்டான்.
{/f90filter}
“நான் என்ன சின்ன குழந்தையா இந்து? இதெல்லாம் முக்கியமா? ஒவ்வொரு நாளும் எவ்வளவு கொடுமையா இருந்துச்சு தெரியுமா? உன்னை இதுக்கு என்ன செய்றது? என்ன பனிஷ்மென்ட் கொடுக்குறது...”