(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

சட்டென, எதிர்பாராமல், காலையில் அவளையே பார்த்துக் கொண்டிருந்த உதயின் முகமும் பார்வையும் அவளின் நினைவில் வந்தது...

   

அவன் அவளை கவனிக்கவில்லை, வேறு எதோ சிந்தனையில் தான் இருந்தான்...

   

ஆனால் அவளுக்கு யாரோ அவளை பார்ப்பது போல் தோன்றியது ஏன்??? இன்றுவரை அவளின் உள்ளுணர்வு அவளை அப்படி ஏமாற்றியது இல்லையே...!

   

சிந்தித்தப்படி தூங்கி போனாள் நந்திதா...!

   

❀✿❀✿❀✿

   

“ஓ! மை காட் நந்து நீ தானா? என்னால நம்பவே முடியலை!”

   

மைக்ரோ கண்ட்ரோலருக்கான கோட் ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்த நந்திதா அந்த குரலில் திகைத்துப் போய் நிமிர்ந்தாள்.

   

அங்கே சந்தோஷ் நின்றிருந்தான்!

   

ஒரு காலத்தில் இந்த குரல் கேட்க, இவனை நேரில் பார்க்க ஏங்கி இருக்கிறாள். இப்போது அவனை பார்க்கவே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.

   

தன் பெரிய விழிகளால் சந்தோஷை ஆழ்ந்து நோக்கிய நந்திதா, பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

   

சந்தோஷை அது எல்லாம் அசைக்க முடியுமா என்ன? அவன் அவளின் அமைதியை கண்டுக்கொள்ளாமல், அவளின் மேஜையின் மறுபுறம் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

   

“புது கிளையன்ட்ன்னு ரொம்ப டென்ஷனா வந்தேன். இங்கே வந்து பார்த்தா நீ இருக்க! அப்போ எனக்கு கவலையே இல்லை! இந்த ஆர்டர் கன்ஃபார்ம்ட். நீ எனக்காக இந்த ஆர்டர் கூட 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.