(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

நீ தேவதை தானே நதி...

   

மனதினுள் நந்திதாவை செல்லம் கொஞ்சியப்படி வந்தவன் அங்கே சந்தோஷை பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

   

இவனையா நதி உட்கார வைத்து கதை பேசிக் கொண்டிருக்கிறாள்? அவனால் நம்ப முடியவில்லை.

   

நந்திதாவின் வாழ்வில் நடந்தது முழுவதையும் தெரிந்து வைத்திருந்த உதய்க்கு கோபம் வந்தது!

   

ஆனால் நந்திதாவும் கோபமாக பேசியது போல தான் இருந்ததோ... யோசனையுடன் சந்தோஷை பார்த்தான், அவன் முகத்தில் பெரிய புன்னகை தான் இருந்தது.

   

உதய் அறையினுள் வருவதை கவனித்த உடனேயே மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள் நந்திதா.

   

அவள் மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் ஏதோ பெரிய தலையாக இருக்க வேண்டும் என்று ஊகித்து சந்தோஷும் எழுந்து நின்றான்.

   

“ஹாய் உதய்,” என நந்திதா சொன்னதை ஏற்றுக் கொள்வதாக தலை அசைத்த உதய்,

   

“ஹலோ நந்திதா, வாட்ஸ் திஸ்? உங்க மேல நான் பெரிய ஹோப் வச்சு ரொம்ப பெரிய பொறுப்பை ஒப்படைச்சிருக்கேன், நீங்க என்ன இங்கே உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்கீங்க?” என்றான்.

   

நந்திதா உதயை ஆச்சர்யத்துடன் ஒரு பார்வை பார்த்தாள்.

   

உதயினால் அந்த பார்வைக்கான பொருளை புரிந்துக் கொள்ள முடியவில்லை... ஆனால் நந்திதாவின் அந்த பெரிய விழிகள் அவனை மயக்கியது... அப்படியே அதில் மூழ்கிப் போவதை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.