போல ஒரு எண்ணம் ஏற்பட்டது...
நந்திதா அவனிடம் ஏதோ சொல்வது அவளின் உதடு அசைவதில் இருந்து தெரிந்தது... ஆனால் அவன் காதுகளில் அது எதுவும் விழவில்லை... அவன் அவளின் விழிகள் எனும் மாயா லோகத்தில் இருந்தான்...
எல்லாம் ஒரு சில வினாடிகள் மட்டுமே...
நந்திதாவின் விழிகள் இமைத்தன... உதயின் மாயாலோகமும் மறைந்தது... சாதாரணமான இந்த பூலோகத்திற்கு வந்து சேர்ந்தான்.
நந்திதா பேசுவது இப்போது அவனுக்கு கேட்டது...
“...யும் செமிகன்டக்டர்ஸ்க்கு ப்ரோபோசல் கொடுத்திருக்காங்களாம்...”
உதயின் மூளை வேகமாக வேலை செய்து அவள் என்ன சொல்லி இருப்பாள் என்பதை கணித்தது.
“ஓகே நந்திதா! பட், அது ரொம்ப இனிஷியல் ஸ்டேஜ்ல இருக்கு! மத்தபடியும் நீங்க நாகுவை பாயின்ட் செய்து விடுங்க. அவங்களுக்கு இந்த ப்ராசஸ் பத்தி எல்லாம் நல்லா தெரியும். உங்களுக்கு கம்பெனி விஷயம் எல்லாம் பழகினதுக்கு பிறகு நீங்களே செய்யலாம்.”
“ஷுயர் உதய்!”
“நான் இப்போ நாகுவை மீட் செய்வேன், உங்க பேர்...” என்றப்படி சந்தோஷை பார்த்தான் உதய்!
“என் பேர் சந்தோஷ், மிஸ்டர் உதய்... இது என்னோட கார்ட். நான் ஃபோர்-என்ல வைஸ் ப்ரெசிடென்ட்டா இருக்கேன். நாம இங்கே நேரா மீட் செய்ய இதுவரைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கலை. இன்ஃபாக்ட் நானும் நீங்க படிச்ச காலேஜில தான் படிச்சேன். அங்கே மீட் செய்திருக்கோம்... நான் உங்களுக்கு சீனியர்... நந்து என்னோட செட்...”