(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

கொடுக்க மாட்டீயா என்ன?”

   

கேட்டுவிட்டு அவன் கொடுத்த ஈ என்ற இளிப்பை அருவெறுப்புடன் பார்த்தாள் நந்திதா.

   

ஒருகாலத்தில் மனம் மயக்கும் மந்தகாச புன்னகையாக தோன்றியது இப்போது அவளின் கண்ணுக்கு இப்படி தெரிகிறது!!!!

   

இவன் மீது ஒரு காலத்தில் அவளுக்கு காதலோ காதல் இருந்ததை நினைத்து பார்த்து இப்போது அவளுக்கு அவள் மீதே எரிச்சலாக வந்தது.

   

“மிஸ்டர், உங்களுக்கு என்ன வேணும்? யார் உங்களை என் ரூம் உள்ளே வர விட்டது? இது போல இன்டீசன்டா இனிமேல் பீகேவ் செய்யாதீங்க,” என்றாள் நந்திதா கடுமையான குரலில்.

   

அந்த குரல், அவள் சொன்னது எதுவுமே சந்தோஷை அசைக்கவில்லை.

   

“நந்து டார்லிங், எங்க கம்பெனி ஃபோர்-என் உங்க கம்பெனியோட புது ஆர்&டி டிபார்ட்மெண்டுக்கு தேவையான செமிகண்டக்டர்ஸ் கொடுக்க ப்ரோபோசல் கொடுத்திருக்கோம். ஆர்&டி’ன்னு பேர் இருக்கவே சொட்டை தலை யாராவது இருப்பாங்கன்னு நினைச்சேன். இங்கே வந்து பார்த்தா என்ன ஒரு ஆச்சர்யம், தேவதை மாதிரி வெள்ளை டிரஸ்ல நீ இருக்க! சிறகு மட்டும் தான் மிஸ்ஸிங்...”

   

நந்திதா சந்தோஷை எரித்து விடுவதுப் போல பார்த்து முறைத்தாள்.

   

“லுக் ஹியர் மிஸ்டர் சந்தோஷ், மரியாதையா பேசி பழகுங்க. என் பேரை சுருக்கி கூப்பிடுறது, அது கூட தேவை இல்லாத எக்ஸ்டென்ஷன் சேர்க்குறது, இது எல்லாம் வேண்டாம். அதே போல இந்த மாதிரி தேவை இல்லாம தேவதை அது இதுன்னு சொல்றதும் வேண்டாம்...”

   

நந்திதா கடுமையான தோரணையில் அதை சொல்லிக் கொண்டிருந்த நேரம், கதவை தட்டி விட்டு அந்த அறையின் உள்ளே வந்தான் உதய். அவனின் காதுகளில் நந்திதா சொன்ன கடைசி ஐந்து வார்த்தைகள் மட்டுமே விழுந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.