வீட்டினுள் நுழையும் போதே பேசிக் கொண்டு வந்த நந்திதா, காமாட்சியின் அருகே இன்னொரு பெண்மணி இருப்பதை அப்போது தான் கவனித்து விட்டு வாயை மூடிக் கொண்டாள்.
“வா நந்து... இது ரேவதி... உதயோட அம்மா...” என்று ரேவதியை நந்திதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள் காமாட்சி.
ரேவதியிடம் உதயின் ஜாடை நன்றாகவே தெரிந்தது. விலை உயர்ந்த புடவை கட்டி இருந்தாலும், எந்த வித அக்கறையும் இல்லாமல் தலையில் கொண்டை போட்டு, முகத்திலும் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் இருந்தாள் ரேவதி. நந்திதாவிற்கு ஏனோ அவளுடைய அம்மாவின் ஞாபகம் வந்துப் போனது. கேன்சர் என்று தெரிந்தப் போது கூட அதிகமாக தன்னை மாற்றிக் கொள்ளாத அம்மா, அப்பாவின் திடீர் மரணத்திற்கு பின் தலைகீழ் தான் மாறிப் போனார்கள்!
மனதில் கனிவு தோன்ற, “வணக்கம்மா...” என்றாள் நந்திதா.
ரேவதியின் கண்களும் நந்திதாவை எடைப் போடுவதுப் போல தான் பார்த்துக் கொண்டிருந்தது! அவள் ரேவதியை பற்றி யோசித்ததுப் போல அவர்களும் யோசிக்கிறார்கள் என்று நந்திதா நினைத்துக் கொள்ள, பெயருக்கு சின்ன புன்னகை செய்த ரேவதி, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அவளை துளசியின் தோழி என்று சொல்லி இருப்பார்களா அல்லது உதயின் கம்பெனியில் வேலை செய்பவள் என்று சொல்லி இருப்பார்களா?? மனதில் எழுந்த புது கேள்வியுடன் காமாட்சி பக்கம் கவனத்தை திருப்பினாள் நந்திதா.
எல்லாம் நலம் என்பதுப் போல காமாட்சி மென்மையாக புன்னகைக்கவும், நந்திதாவின் மனதில் இருந்த கேள்விகள் காற்றில் கரைந்துப் போய் மனம் தெளிவானது.
கையில் இருந்த ரோஜாவை காமாட்சியிடம் கொடுத்தாள்.
“ஒன்னே ஒன்னு தான் வாங்கினீயா நந்து? துளசிக்கு வாங்கலையா? அவளுக்கும் ரோஸ்