(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 16 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

நேரம் போவதே தெரியாமல் நந்திதா தன் அம்மாவின் எழுத்துக்களில் ஆழ்ந்திருக்க, "நந்து..." என்ற அழைப்புடன், கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள் துளசி.

   

கட்டிலில் அமர்ந்திருந்த நந்திதாவைப் பார்த்தவள், "என்னடி இப்படி உட்கார்ந்திருக்க? முகம் கழுவின மாதிரி கூட தெரியலை? அந்த டைரியை எடுத்து படிக்க ஆரம்பிசசிட்டீயா? உனக்கு இப்போ என்ன பிரச்சனை? முதல்ல அதை மூடி வை..." என்றாள் அதட்டலுடன்!

   

நந்திதா அமைதியாக இருந்தாள்.

   

"நீ டிஃபன் சாப்பிட கூட வரலைன்னு அத்தை சொன்னாங்க... வேலைக்காரங்க வந்து கூப்பிட்டா வேண்டாம்னு சொன்னீயாம்?"

   

"பசிக்கலைப்பா! என்னை கொஞ்சம் நேரம் தனியா விடு... ப்ளீஸ்..."

   

துளசி தோழியை முறைத்தாள்!

   

"என்னால உன்னை புரிஞ்சுக்கவே முடியலைடி! இன்னுமா அந்த சந்தோஷை நீ மறக்கலை?"

   

திடீரென துளசி சந்தோஷ் பற்றி பேசவும், நந்திதா புரியாமல் விழித்தாள்!

   

"சந்தோஷா?"

   

"சும்மா நடிக்காத! எல்லாம் எனக்கு தெரியும். இன்னைக்கு அந்த சந்தோஷை மீட் செய்த, அதனால தானே இந்த மூட் அவுட்?  நான் கூட உன்னை புத்திசாலின்னு தப்பா நினைச்சிட்டேன்..."

   

நந்திதா இப்போது துளசியை கோபமாக பார்த்து முறைத்தாள்.

   

"ஆமாம் உனக்கு ரொம்ப தெரியும்! வாயை மூடு..."

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.