"யார் கிட்ட பொய் சொல்ல பார்க்குற? வேற ஏன் இப்படி அழுது வடிஞ்சு உட்கார்ந்திருக்க?"
"ஹேய் ஒசிமம், இரு இரு! உனக்கு எப்படி நான் சந்தோஷை பார்த்தது தெரியும்?"
துளசி நந்திதாவைப் பார்த்து முறைத்தாள். அதாவது முறைப்பது போல் பார்த்தபடி அவசரமாக என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்! உதய் தான் சொன்னான் என்று அவள் நந்திதாவிடம் சொல்ல முடியாதே...
“கேள்வி கேட்டா என்ன நீ முறைக்குற ஒசிமம்?”
“அப்புறம் வேற என்ன செய்வாங்களாம்? சரத் என் கிட்டே சொன்னார்...”
“சரத்தா?”
“ஆமாம்! சந்தோஷை உதய் கூட பார்த்தேன்னு சொன்னார்... புது டிபார்ட்மென்ட் விஷயமா வந்திருந்ததா உதய் சொன்னான் போலருக்கு...”
“ஓ!”
“இங்கே வந்து பார்த்தா மேடம் சோக கீதம் வாசிக்குறீங்க, அப்புறம் என்ன, எனக்கு புரியாதா?”
“நீ நினைக்குறது தப்பு துளசி, அந்த சந்தோஷ் எனக்கு ஒரு மண்ணும் இல்லை... அவனை மீட் செய்தது என் மனசுல பெரிசா பதிவாக கூட இல்லை.”
“அப்புறம் ஏன் டல்லா இருக்க?”
“ப்ச்... அம்மா ஞாபகம் வந்தது...”
துளசி தோழியை ஒரு சில வினாடிகள் பார்த்தாள்... அவளின் மனதில் இருக்கும் வலி இவளுக்கும் புரிந்தது... ஆனால் அதைப் பற்றி தொடர்ந்து அவளை யோசிக்க விட