விரும்பாமல், பேச்சை மாற்றினாள்.
“ஆமா, என்னவோ ரோஸ் வாங்கிட்டு வந்தன்னு கேள்வி பட்டேன்... எனக்கு எங்கேடி?”
“சும்மா நடிக்காதே ஒசிமம்!”
“நடிக்குறதா?”
“ஆன்ட்டி பத்தி எனக்கு தெரியாது, நீ வந்த உடனேயே உண்மையை ஒப்பிச்சிட்டு தெரியாத மாதிரி இருக்க சொல்லி இருப்பாங்க...”
“எப்படிடி இதெல்லாம்...”
“அதெல்லாம் ஐ.க்யு பவர்... ஃப்ரிட்ஜ்ல இருக்கு எடுத்துக்கோ போ...”
“தேங்க்ஸ்டி... நீ நிஜமாவே ஓகே தானே?”
“இதுல என்ன உனக்கு சந்தேகம்? சந்தோஷ் பத்தி எல்லாம் யோசிச்சு டைம் வேஸ்ட் செய்ற அளவுக்கு நான் பேக்கு இல்ல... நீ கவலையே பட வேண்டாம்... இப்போ என் ஃபோகஸ் எல்லாமே என்னோட புது வேலைல தான் இருக்கு... போ, போய் பூவை எடுத்துக்கோ...”
நந்திதா திடமாக சொல்லவும், துளசி தெளிந்து விட்ட மனதுடன் ஃப்ரிட்ஜ் நோக்கி சென்றாள்.
❀✿❀✿❀✿
நந்திதா நதி எம்படட் சாஃப்ட்வேர் இந்தியா ப்ரைவேட் லிமிட்டடில் சேர்ந்து மூன்று மாதம் ஓடிப் போய் இருந்தது...
தன் வேலை மட்டுமல்லாமல், அந்த கம்பெனி, அதன் முக்கிய அங்கத்தினர் என்பது போன்ற விஷயங்களும் நந்திதாவிற்கு புரிய தொடங்கி இருந்தது...