❀✿❀✿❀✿
அன்று நந்திதாவிற்கு முக்கியமான நாள்! அவள் ‘நதிக்காக’ டிசைன் செய்திருந்த முதல் ப்ரோடோடைப், அன்று ஒரு எக்சிபிஷனில் முதல் முறையாக விளக்கத்துடன் காட்சிக்கு வருகிறது.
எம்படட் சாஃப்ட்வேர் என்பது மைக்ரோவேவ் அவன், வாஷிங் மெஷின் போன்ற கருவிகளில் நாம் பட்டனை அழுத்தினால் என்ன செய்ய வேண்டும் என்று அந்த கருவிக்கு அறிவுறுத்தும் திறமையை கொடுக்கும் சிப்பினுள் (chip) அமைந்திருக்கும் சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்.
நந்திதா ரோபோட் எனும் இயந்திர மனிதனை திறம்பட இயக்க புதுவிதமான ‘ப்ரெயின்’ டிசைன் ஒன்றை உருவாக்கி இருந்தாள். அதை பற்றி அவள் வெளியிட்டு இருந்த ஜர்னல் பல மேல் நாட்டு நிறுவனங்களை திரும்பி பார்க்க வைத்திருந்தது. குறிப்பாக ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் அதன் மேல் மிகுந்த ஈடுபாடு காட்டியது.
பொதுவாக இது போன்றவற்றுக்கு ஜப்பானியர்கள் தான் புகழ் பெற்றவர்கள். ஆனால் அந்த அமெரிக்க நிறுவனம், நந்திதாவின் டிசைன் சரியாக வேலை செய்தால், அவர்கள் இப்போது பயன்படுத்தி வரும் ஜப்பானிய சிப்பை நிறுத்தி விட்டு, ‘நதியின்’ சிப்பை வாங்க தயாராக இருந்தார்கள்.
இது பல கோடி ப்ராஜக்ட் என்பது மட்டுமில்லாமல், இந்திய அளவில் முன்னோடியான ப்ராஜக்ட்டாகவும் இருந்தது...
இதுவரை எழுத்தாக மட்டும் இருந்த அந்த அவளின் ப்ராஜக்ட்டின் முதல் மாதிரி அன்று அனைவரின் முன்பும் காட்சிக்கு வர இருக்கிறது!
நந்திதா அந்த பொருட்காட்சி நடக்கும் இடத்திற்கு சீக்கிரமே வந்து விட்டாள். எத்தனை அமைதியாக இருக்க முயன்றாலும் அவளின் இதயம் ரயில் வண்டி ஓடுவது போல் தடதடக்க தான் செய்தது...