“எவ்வளவு க்ளோஸ் ஃப்ரென்டா இருந்தாலும் இப்படி ரொம்ப அதிக இடம் கொடுக்குறது சரியில்லை அக்கா... துளசி நல்ல பொண்ணு, அவ மனசு நோகுற மாதிரி இவளோட சேர்ந்து எதையாவது செய்து வைக்காதீங்க...”
“நந்து அப்படி எல்லாம் செய்ய மாட்டா ரேவதி. ஆமாம், நீ ஏதோ பேசனும்னு சொன்னீயே....”
“உதய் கல்யாண விஷயமா பேசனும்னு நினைச்சேன்...”
“இப்போ என்ன தயக்கம், பேசு... துளசியும் இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திருவா...”
“இல்ல, நான் அப்புறம் பேசுறேன்... அந்த பொண்ணும் இருப்பா... நம்ம வீட்டு விஷயத்தை வெளி ஆள் முன்னாடி ஏன் பேசனும்... நான் நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா வரேன்க்கா...”
ஒட்டுக் கேட்பது, தன்னையும் மீறி காதில் விழுந்தாலும் கூட அப்படி கேட்பது தவறு என்பது நந்திதாவிற்கு தெரியும்... ஆனாலும் ஆர்வக் கோளாறு யாரை விட்டது!!!
ரேவதி சொன்னதை கேட்டு உதடுகளை கடித்துக் கொண்டவள் சத்தம் போடாமல் மீண்டும் படி ஏறி சென்றாள்.
அவளுடைய அறையினுள் சென்று கதவை மூடிக் கொண்டவளுக்கு மனம் கனத்தது.
ரேவதி சொன்னதும் சரி தான். அவள் இந்த குடும்பத்தில் வெளி ஆள் தானே...?
அந்த வீட்டில் இருந்த நான்கு பேரும் அவளை தங்களில் ஒருத்தியாக பாவித்து பேசி பழகியதால் அவள் அவர்களின் குடும்பத்தில் ஒருத்தி என்று ஆகி விட முடியுமா என்ன?
நந்திதாவின் கைகள் தானாக அவளின் அந்த சின்ன நோட் புக்கிடம் சென்றது... அதில் இருந்த புகைப்படத்தை பார்த்தவளின் கண்கள் அவளையும் மீறி கலங்கியது.
கண்ணிலாமலே பிறந்தால் பரவாயில்லை... கண்களால் உலகத்தை பார்த்து பார்த்து ரசித்து பல