தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 21 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
துளசி சென்ற பின் கதவை தாளிட்டு, விளக்கை அணைத்து படுத்த நந்திதாவிற்கு தூக்கம் அவள் நினைத்ததுப் போல் உடனே வருவதாக இல்லை...
காலையில் இருந்து நடந்தவற்றை மீண்டும் தனக்குள்ளே அசைப்போட்டாள்...
எக்ஸிபிஷனுக்கு வந்த உடனேயே பிரச்சனையை தெரிந்துக் கொண்டு டென்ஷன் ஆகாமல், அவளையும் ரிலாக்ஸ் ஆக சொன்ன உதய்...
நாகுவுடன் சேர்ந்து எம்.டி என்ற பந்தா இல்லாமல் அவள் வேலை செய்யும் போது டெமோ கொடுத்த உதய்...
முழு சர்க்யுட்டையும் முடித்த பிறகு அவள் தயங்கிய போதும், எந்த தயக்கமும் இல்லாமல் ஸ்விட்சை தட்டிய உதய்...
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான லக்கி சார்ம் இருக்குமே... ஒருவேளை அவளுடைய சார்ம் உதய் தானோ என்னவோ...
கடைசியாக மழையில் நனைந்த ஈரத்துடன் அவள் முன் வெற்று மார்புடன் வந்து நின்ற உதய்...
அவள் முகத்தில் புன்னகை தோன்றியது...
நல்லவேளை துளசி அருகே இல்லை...
இல்லை என்றால் தனியாக சிரிப்பதற்கு லூசு பட்டம் கட்டி இருந்திருப்பாள்...!
❀✿❀✿❀✿
துளசி கீழிறங்கி சென்ற போது உதய் அவளுக்கு முன்பே வந்து காமட்சி, ராஜசேகர் மற்றும் சரத்துடன் கதை அளந்துக் கொண்டிருந்தான்.