“மாடில ஒரு மேடம் உனக்கு கோபமே வராது... அப்படி இப்படின்னு கதை சொல்லிட்டு இருக்காங்க...”
“அண்ணி...! நான் பொதுவாகவே ஆஃபிஸ்ல எப்போதும் கூலா தான் இருப்பேன்...”
“ஓ! அப்போ ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் எல்லாம் அம்மாக்கு தானா?”
“அப்படி இல்லை...”
“அம்மா கிட்ட கோபத்துல தட்டை தூக்கி அடிக்குறது எல்லாம்... என்ன உதய் இது? என்னால நம்பவே முடியலை...”
“ப்ச்... சும்மா இவளை கல்யாணம் செய்துக்கோ, அவளை கல்யாணம் செய்துக்கோன்னு டார்ச்சர் செய்தால் வேற என்ன செய்றது?”
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சரத், “அதுக்காக அப்படியா கோபப் படுவ? அமைதியா பேசுடா.. பாவம் சித்தி...” என்றான்.
“ம்ம்ம்... சரி...” என்றான் உதய் முகத்தை உர்’ரென்று வைத்துக் கொண்டு!
“அத்தைக்காக மட்டும் சொல்லலை உதய்... நந்துவுக்காகவும் சொல்றேன்... அவ ரொம்ப சாஃப்ட்... இந்த கோபம், கத்துறது எல்லாம் இப்போதே நிறுத்திடு... இல்லைனா பின்னாடி காட்டாயம் பிரச்சனை வரும்...” என்றாள் துளசி.
“ம்ம்ம்...”
“உன்னை என்ன கையை காலை கட்டியா கல்யாணம் செய்து வச்சிர போறாங்க? பொறுமையா இரு...”