சரத்தின் டீ ஷர்ட் அவனுக்கு டைட்டாக இருப்பதை கவனித்தபடி சரத்தின் அருகே சென்று அமர்ந்தாள் அவள்.
“என்ன அண்ணி பார்க்குறீங்க, டீ ஷர்ட் ஏன் இப்படி டைட்டா இருக்குன்னா? நீங்க அண்ணாவை சரியா கவனிக்குறது இல்லை போலருக்கு, ரொம்ப இளைச்சு போயிருக்கான்...” உதய் வேண்டுமென்றே துளசியை சீண்டினான்!
“ஹ்ம்ம்...! நான் யோசிச்சது அதில்லை... இவருக்கு அந்த டீ ஷர்ட், ஷார்ட் டீ ஷர்ட் போல இருக்கும்... உனக்கு இவ்வளவு நீளமா இருக்கே நீ இவ்வளவு குள்ளமான்னு யோசிச்சேன்...”
“ஹா ஹா! உதய் உனக்கு வேணும்டா, சரத்தை பத்தி நான் ஒரு வார்த்தை சொன்னாலே அவளுக்கு கோபம் வரும். இதுல உனக்கு ஏன் இந்த வாய் கொடுத்து மாட்டிக்குற வேலை?” என்றாள் காமாட்சி சிரிப்புடன்.
“பெரியம்மா, வர வர மாமியார்ஸ் எல்லாம் சரியே இல்லை... மருமகள்களுக்கு ஏகப்பட்ட இடம் கொடுத்து எங்களை இம்சை படுத்துறீங்க... என்ன அண்ணா, பெரியப்பா?”
துளசி சரத்தை பார்க்க, காமாட்சி ராஜசேகரைப் பார்த்தாள்.
“டேய் உதய், உனக்கேன்டா இந்த தேவை இல்லாத பேச்செல்லாம்? என்னை வம்புல மாட்டி விடாதே! காமாட்சி எது செய்தாலும் அது சரியா தான் இருக்கும்,” என்றார் ராஜசேகர்.
“பெரியப்பா இப்படி காலை வாரீட்டீங்களே... அண்ணா நீ...” என சரத்தை பார்த்தான் உதய்.
“துளசி செய்றது என்ன, மனசுல நினைக்குறது கூட சரியா தான் இருக்கும்,” என்றான் சரத்.
“இந்த வீட்டுல இப்படி இரண்டு ஜிங்-சாங் இருக்குறது எனக்கு தெரியாமல் போச்சே...”
“ஹோய் என்ன வாய் நீளுது... உனக்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் நீ என்ன செய்றேன்னு