(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 07 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

சுமித்ரா விழித்த விதத்தைப் பார்த்து கோபப்பட்டாள் ஹேமா!

   

“அறிவிருக்கா சுமி உனக்கு? இதெல்லாம் விளையாடுற விஷயமா? எவ்வளவு சீரியஸா போக சான்சஸ் இருக்குன்னு தெரியுமா? இவ்வளவு கேர்லஸ்ஸா இருக்க???”

   

“ஹேய் திட்டாதே...”

   

“திட்டாதேவா... உன்னை அடிக்கனும் போல இருக்கு...”

   

“நான் என்ன செய்ய ஹேமா... எதுக்குமே டைமே கிடைக்க மாட்டேங்குது... இந்த வலி வந்திருக்கலைனா இதைப் பத்தி யோசிச்சிருக்க கூட மாட்டேன்...”

   

“இங்கே பார்... மத்தவங்களை கவனிக்குற அளவுக்கு இல்லைனா கூட கொஞ்சமாவது உன் மேலேயும் அக்கறை வை... உன்னை நம்பி நாலு வயசு பொண்ணு ஒருத்தி இருக்கா...”

   

“அவ மட்டுமா, கமல் கூட இருக்கார்...”

   

“ஹப்பா! இந்த லவ்ஸ்க்கு எல்லாம் குறைச்சலில்லை...”

   

“இல்லை தான்...! இந்த வலிக்கு ஏதாவது மருந்து கொடு ஹேமா...”

   

“சும்மா எல்லாம் மருந்து சாப்பிட கூடாது சுமி... ஏன் வலி வருதுன்னு முதல்ல தெரிஞ்சக்கனும்... சில டெஸ்ட் செய்யனும்...”

   

ஹேமாவின் பேச்சை பாதியில் நிறுத்துவதுப் போல அந்த அறைக்குள் அவசரமாக ஒரு நர்ஸ் உள்ளே வந்தாள்.

   

“சாரி டாக்டர்... டெலிவரிக்கு ஒரு பேஷன்ட் அட்மிட் ஆகி இருக்காங்க... லேபர் பெயின் ஸ்டார்ட் ஆன பிறகு அழைச்சிட்டு வந்திருக்காங்க... ட்யூட்டி டாக்டர் பார்த்துட்டு, குழந்தை உடனே பிறக்க சான்சஸ் இருக்குன்னு சொல்லிட்டாங்க... லேபர் ரூம் ரெடி செய்ய 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.