(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

நினைவுகள் பாதி கனவும் நினைவுமாக மீண்டும் அவளின் முன் விரிந்தது...

   

❀✿❀✿❀✿

   

வீட்டில் டிவி பார்த்து போர் அடிக்கவும், எப்போதும் போல ஹேமாவை பார்க்க அவளுடைய அந்த சின்ன மருத்துவமனைக்கு வந்திருந்தாள் சுமித்ரா...

   

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நர்ஸிடம் கதை பேசிவிட்டு, ஹேமாவை பார்க்க அவளின் அறை பக்கம் சுமித்ரா நடக்க, அவளை கவனிக்காமல் வந்து மோதிக் கொண்டான் இளைஞன் ஒருவன்...

   

அவனிடம் இருந்த டென்ஷனும், பரபரப்பும் மோதியதற்கு கோபம் வராமல் செய்ய, அவனை ஆர்வத்துடன் பார்த்தாள் சுமித்ரா...

   

அவள் மீது மோதிய வேகத்தில் அவன் கையிலிருந்து விழுந்திருந்த தாள்களை பரபரப்புடன் கன்னாபின்னாவென்று சேகரித்துக் கொண்டிருந்தான் அவன்...

   

ஏதோ ஒன்று உந்த, அவனின் தாள்களை எடுத்துக் கொடுத்து உதவியவள்,

   

“ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க???” என்று கேட்கவும் செய்தாள்.

   

தன் வேலையை தொடர்ந்தப் படி, அவள் பக்கம் பார்க்காமலே,

   

“அம்மாக்கு அடிப் பட்டிருச்சு.... படிக்கட்டுல இருந்து விழுந்துட்டாங்க... இந்த பேப்பரை அங்கே ஃபிரன்ட் டெஸ்க்ல கொடுத்துட்டு, மருந்து வாங்கிட்டு வர சொன்னாங்க...” என்றான் அவன்...

   

“ஓ...! அவங்களுக்கு ஒன்னும் ஆகாது கவலைப் படாதீங்க.... நீங்க டென்ஷன் ஆகாம இருங்க...” என்றாள் சுமித்ரா.

   

முதன் முறையாக, பேப்பர்களிடம் இருந்து பார்வையை திருப்பி, அவளை ஆச்சர்யத்துடன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.