மெத்தென நல்ல சுகமாக இருக்க, நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்...
ஹேமாவின் இந்த மருத்துவமனைக்கும் அவளுக்கும் பல கோணங்களில் தொடர்பு இருந்தது... ஹேமா சின்ன க்ளினிக்காக இதை தொடங்கிய நாள் இன்னமும் அவளுக்கு நினைவு இருந்தது...
ஹேமாவும், சுமித்ராவும் சிறு வயது முதலே தோழிகள்... எல்.கே.ஜி முதலே ஒன்றாக படித்த தோழிகள்...
ஹேமா படிப்பில் படு சுட்டி என்றால், சுமித்ரா சுமார் என்று கூட சொல்ல முடியாத அளவில் இருந்தாள்.
ஆனால் சுமித்ராவிற்கு சமையல் கலையின் மீது தனி பற்று இருந்தது... ஹேமாவின் அம்மா செய்யும் வித விதமான உணவுகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்... அதற்காகவே எப்போதும் ஹேமாம்மா என ஹேமாவின் அம்மா பின்னே சுற்றுவதே அவளுக்கு வேலையாக இருந்தது...
இன்று அவர்கள் உயிருடன் இல்லை என்பதை இப்போதும் நம்பவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது...
எத்தனையோ வருடங்கள் ஓடிய பின்பும் ஹேமா - சுமித்ராவின் நட்பு அப்படியே மாறாமல் தொடர்ந்துக் கொண்டிருந்தது... கமலும் சரி, ராகுலும் சரி அவர்கள் இருவரின் நட்பிற்கு இடையே வந்ததில்லை...
ரேஷ்மி பிறந்தது கூட இங்கே இதே ஹேமாவின் ஹாஸ்பிட்டலில் தான்...
அது மட்டுமா, கமல் அவள் வாழ்வில் வந்ததும் கூட இங்கே தான்...
மெல்ல சுமித்ராவிற்கு தூக்கம் எட்டிப் பார்த்தது....
கூடவே, எத்தனையோ நாட்கள், எத்தனையோ முறை, அவள் திரும்பி பார்த்த பழைய