(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“நீ திரும்பி வர வரைக்கும் வெளியே பேஷண்ட்ஸ் வெயிடிங் ரூம்ல வெயிட் செய்றேன் ஹேமா...”

   

“பல்லை உடைச்சிடுவேன்...! என்ன ஓவரா பந்தா காமிக்குற? என் ரூம்லேயே ஒரு ரெக்லைனர் இருக்கு. ஒழுங்கா உட்கார்ந்து ரெஸ்ட் எடு... ரெக்லைன் செய்துட்டு தூங்குறனா கூட தூங்கு...”

   

“இல்லை ஹேமா...”

   

ஹேமா நின்று, திரும்பி சுமித்ராவைப் பார்த்து முறைத்தாள்....!

   

“சரி சரி முறைக்காதே... சும்மாவே உன் முகத்தை பார்த்தா பயமா இருக்கும்...”

   

“பயமா இருக்கு தானே, போ போய் நான் சொன்னதை செய்...”

   

“சரி... செய்றேன்...! நீ பார்த்துக்கோ...”

   

“ம்ம்ம்....”

   

❀✿❀✿❀✿

   

ஹேமாவின் அறைக்கு திரும்பிய சுமித்ரா, மேஜையின் மீது ஹேமா விட்டு விட்டு சென்றிருந்த தட்டை மூடி வைத்து விட்டு, மற்ற உணவிருந்த டப்பாக்களையும் மூடி பிரிட்ஜில் வைத்தாள்.

   

ஹேமாவின் மேஜையில் இறைந்திருந்த பேப்பர்களை அடுக்கி வரிசை படுத்தியவள், சில நிமிடங்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்...

   

அதுவும் போர் அடிக்க, ஹேமா சொன்னது போல அங்கிருந்த ரெக்லைனரில் சாய்ந்து அமர்ந்தாள்...

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.