சொல்லிட்டேன்.... நீங்க வந்தா கரக்ட்டா இருக்கும் டாக்டர்...”
“வரேன் ரமணி.... பேஷன்ட்டோட ஹிஸ்டரி எடுத்து வைங்க...’
“கம்ப்யூட்டர்ல ரெடியா வச்சிருக்கேன் டாக்டர்... அவங்க ஃபைல் இதோ இருக்கு...”
“குட்... இங்கே வச்சுட்டு போங்க... நான் ஒரு இரண்டு நிமிஷத்துல வரேன்...”
ஹேமா முன்பே கையில் எடுத்து வைத்திருந்த ஒரு கவளை சாதத்தை வாயில் போட்டு விட்டு, அவசரமாக எழுந்து கையை கழுவினாள்.
சுமித்ராவிற்கு அவளை பார்த்து பாவமாக இருந்தது...!
“என்ன ஹேமா இது? சாப்பிட்டு முடிச்சிட்டுப் போ... அதான் ட்யூட்டி டாக்டர் இருக்காங்களே அவங்க பார்க்க மாட்டாங்களா???”
நர்ஸ் வைத்து விட்டு சென்றிருந்த ஃபைலை புரட்டியபடி,
“என்ன சுமி புரியாத மாதிரி சொல்ற... அப்படி கேர்லஸா விட முடியுமா??? இதெல்லாம் இந்த வேலைல சகஜம்...” என்றாள் ஹேமா.
“ப்ச்...” என தோழிக்காக அலுத்துக் கொண்டாள் சுமித்ரா.
“சரி, நீ இங்கேயே இரு சுமி... ரெகார்ட்ஸ் படி நல்ல ஹெல்தியான பொண்ணு தான்... மெடிகல் ஹிஸ்டரி எதுவும் இல்லை... நார்மல் டெலிவரி சான்சஸ் அதிகம்... நான் போய் பார்த்துட்டு வரேன்... நீ ரெஸ்ட் எடு...”
“சரிப்பா...” என்றபடி ஹேமாவுடனே நடந்தாள் சுமித்ரா...
“நீ எங்கே என் கூட வர?”