Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 08 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சுமித்ராவிடம் “தேங்க்ஸ்...” என்றவன், மீண்டும் தன் வேலையை தொடர தொடங்கினான்.
ஒரு சில கணங்கள் மட்டுமே பார்த்திருந்த அவனின் கண்கள் சுமித்ராவை வெகுவாக கவர்ந்திருந்தன...
என்ன மாதிரியான காந்த விழிகள் அவை... கருவிழிகள் திராட்சை பழங்கள் போல அழகாக...
ஹையோ.... என்ன இது ஆண்கள் சைட் அடித்து வர்ணிப்பது போல அல்லவா அவளும் வர்ணிக்கிறாள்.... ப்ச்.... பரவாயில்லை... எல்லாவற்றிலும் சம உரிமை இருப்பது நல்லது தான்...!
ஆனாலும் சூப்பர் அழகு கண்கள் இவனுக்கு...!
மிகவும் முக்கியமான யோசனையில் சுமித்ரா தன்னை மறந்திருக்க, அந்த ‘கண்ணழகன்’ கீழே இருந்த அனைத்து தாள்களையும் எடுத்து விட்டு, அவள் பக்கமாக தன் கையை நீட்டினான்...
சுமித்ராவிற்கு அவன் எதற்கு வலது கையை நீட்டுகிறான் என்று புரியவில்லை...
ஏதோ கொஞ்சமாக சைட் அடித்தாள் என்பதற்காக கையை நீட்டுகிறானே கொழுப்பு பிடித்தவன்....!
சுமித்ராவின் முகபாவத்தை கவனித்து என்ன புரிந்துக் கொண்டானோ,
“உங்க கையில இருக்க பேப்பரை, கேட்கிறேன்...” என்றான் அவன் கண்கள் மின்ன.
“ஓ! இந்தாங்க...” என்று கையில் இருந்த தாள்களை கொடுத்தாள் அவள்.
“நீங்க டாக்டரா???”
அவனின் கேள்வியை கேட்டு நம்ப முடியாத அளவிற்கு அதிர்ந்துப் போனாள் சுமித்ரா...!