(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

அவளை பார்த்து டாக்டரா என்று கேட்கிறானே, இவன் ரொம்ப ஓவர் பேக்காக இருப்பானோ??

   

“அது... அது... இங்கே யாருமே அம்மாக்கு என்ன ஏதுன்னு எதுவுமே சொல்ல மாட்டேங்குறாங்க... உங்களை பார்த்தா ரொம்ப நல்லவங்களா தெரியுது...”

   

அவன் பேச்சை முடிக்கும் முன்பே,

   

“ஹேய், சுமி, இங்கே என்னடி செய்யுற?” என்ற ஹேமாவின் குரல் கேட்டது.

   

“ஹேமா, நல்ல டைமுக்கு வந்த... இவரோட அம்மாவை இங்கே அட்மிட் செய்திருக்காங்களாம்... நீ பார்த்தீயா? எப்படி இருக்காங்கன்னு சொல்லேன்...” என்று அடுக்கிக் கொண்டே போனாள் சுமித்ரா.

   

“மூச்சு விட்டு பேசுடி...” என்று தோழியிடம் சொன்ன ஹேமா, மற்றவனிடம்,

   

“உங்க அம்மா பேர் என்னங்க?” என்றுக் கேட்டாள்.

   

“பூங்கோதை டாக்டர்...” என்றான் அவன்.

   

“ஓ, படிக்கட்டுல இருந்து விழுந்துட்டாங்கன்னு தானே அட்மிட் செய்தீங்க? அவங்களுக்கு பெருசா ஒண்ணுமில்லை... கனுக்கால் கொஞ்சம் ஸ்ட்ரெயின் ஆகி இருக்கு... ஒரு வாரம் பிசியோதெரபி ட்ரீட்மென்ட் எடுத்தால் சரியாகிடும்... பிசியோதெரபி டாக்டர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டு வீட்டுல இருந்து அழைச்சிட்டு வந்து கன்சல்ட் செய்தா போதும்... ஷீ இஸ் ஃபைன்... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும்...”

   

“தேங்க்ஸ் டாக்டர்...” என்றவன், சுமித்ராவிடம்,

   

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க... என்னவோ ஏதோன்னு யோசிச்சிட்டு இருந்தேன்... நீங்க சொன்ன மாதிரியே பெரிசா எதுவும் இல்லாமல் போச்சு.... ரொம்ப தேங்க்ஸ்ங்க... நான் போய் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.