தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 22 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ரேவதி தன் எதிரில் வந்து நின்ற உதயை பார்த்தும் பார்க்காததுப் போல கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
“அம்மா... உங்களுக்காக ஸ்பெஷலா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்,” என்றான் உதய்!
ரேவதி அப்போதும் காது கேட்காதவளைப் போல அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அவளருகில் வந்து மண்டியிட்ட உதய், “என்னம்மா இன்னும் கோபம் தீரலையா? சாரிம்மா...” என்றான் கொஞ்சலாக.
“என் கிட்ட யாரும் செல்லம் கொஞ்ச தேவையில்லை,” என்றாள் ரேவதி முகத்தை திருப்பிக் கொண்டு.
“உங்க கிட்ட செல்லம் கொஞ்சாம வேற யாரு கிட்ட கொஞ்சுறது?”
“யாரை வேணா போய் கொஞ்சு...”
“என்னம்மா நீங்க, ஒரே ஒரு தடவை கோபப் பட்டேன், அதுக்கு போய் இப்படி கோவிச்சுக்கிட்டா எப்படி?”
“க்கும் உன்னை கண்ணுக்கு கண்ணா பொத்தி வச்சு வளர்த்தா ஏன் தட்டை தாக்கி என் மேல அடிக்க மாட்ட?”
“அநியாயத்துக்கு பொய் சொல்ல கூடாது. நான் அடிச்ச தட்டு உங்க பக்கத்துல கூட வரலை...”
“ஓஹோ அதுக்கு வேற வருத்தப் படுறீயா?”
“போங்கம்மா... என் செல்ல அம்மா நீங்க... சாரி, இனிமேல் உங்க கிட்ட கோபப் பட மாட்டேன் சரியா?”