(Reading time: 5 - 10 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“அப்படியே இருந்தாலும் என்ன? இவ்வளவு பெரிய கம்பெனி சொந்தமா நடத்துறவனால அவனுக்கு ஏத்த பொண்ணா தேர்ந்தெடுக்க தெரியாதா என்ன?”

   

“அது என்னவோ எனக்கு தெரியலை...”

   

அமைதியாக அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த நந்திதாவிற்குள் உதய் காதலிக்கிறானா என்ற கேள்வி எழுந்து அவளுக்குள் சிறிய அலையை ஏற்படுத்தியது...

   

மேலே மற்றவர்கள் பேசியதும், விவாதித்ததும் அவளின் கவனத்தை எட்டவே இல்லை!

   

❀✿❀✿❀✿

   

இரவு உணவு நேரத்திற்கு பின், காமாட்சி தனியாக இருக்கும் போது, “எதுக்கு அத்தை ரேவதி அத்தை சொன்ன விஷயத்தை சாப்பிடும் போது எடுத்தீங்க?” என வினவினாள் துளசி.

   

“ஏன் துளசி கேட்குற???”

   

“இல்ல... நந்துவும் அங்கே இருந்தாளே, அப்போ எதுக்கு அந்த பேச்சுன்னு...”

   

“அவ அங்கே இருந்ததால தான் நான் அந்த பேச்சை அப்போ ஆரம்பிச்சேன்...”

   

“அத்தை...!”

   

துளசியின் அதிர்ச்சியை கவனித்து சிரித்த காமாட்சி, “என்ன????” என்றாள் அதே சிரிப்புடன்!

   

“உங்களுக்கு எப்படி அத்தை தெரியும்?”

   

“என்ன தெரியும்???”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.