“என்னடா இவ்வளவு உருகல்? பெரியம்மா ரொம்ப திட்டினாங்களா?”
“ஹ்ம்ம்... கொஞ்சம்... அப்புறம் பெரியப்பா கொஞ்சம்... சரத் கொஞ்சம்... அண்ணி கொஞ்சம்....”
“அது தானே பார்த்தேன்!”
“அவங்க திட்டினதுக்காக இல்லம்மா... எனக்கே என் மனசு உறுத்திச்சு...”
“உறுத்தும் உறுத்தும்... உதி, உங்கப்பா இறந்தப்போ உனக்கு நாலு வயசு! அன்னைல இருந்து எனக்குன்னு இருக்குறது எல்லாமே நீ தான்...”
“எனக்கு இதெல்லாம் தெரியாதா? நீங்க சொல்லனுமா என்ன?”
“இல்லை உதி, என்னால நீ செய்றதை எல்லாம் ஏனோ தானோன்னு எடுத்துக்க முடியாது... நீ சின்னதா ஏதாவது சொன்னால் கூட எனக்கு மனசு தாங்காது!”
“நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்ம்மா.”
“சரி அதை எல்லாம் விடு, இப்போ முக்கியமான விஷயம் உன் கல்யாண விஷயம்...”
“அம்மா திரும்பவுமா?”
“இங்கே பார் உதி, உனக்குன்னு வரவ உன்னை என்கிட்டே இருந்து பிரிக்க கூடாது...”
“அதெல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க அம்மா!”
“செய்ய மாட்டாங்களா? ரொம்ப அப்பாவியா இருக்க நீ! உனக்கும் எனக்கும் பிடிக்குற மாதிரி ஒரு பொண்ணை செலக்ட் செய்தா அந்த பிரச்சனை எல்லாம் இல்லை.”