“வாலு! வாலு பொண்ணு நீ! சரி, சரி இன்னைக்கு ரொம்ப சிரிச்சாச்சு, கொஞ்சம் சீரியஸ் விஷயம் பேசுவோம்...”
ஆச்சர்யத்துடன் “என்ன விஷயம் அத்தை?” என்றாள் துளசி.
“ரேவதி ஃபோன் செய்து பேசினா...”
“ஏன்ம்மா, திரும்ப அம்மாவும் பையனும் சண்டையா?” என வினவினான் சரத்.
“இல்லைடா! ரேவதிக்கு உதய் மேல ஒரு சந்தேகம்...”
அதுவரை வாயாடி கொண்டிருந்த நந்திதா இப்போது அமைதியாக அவர்களின் பேச்சை கேட்டபடி உணவு உண்பதை தொடர்ந்தாள்.
“உதய் மேல சந்தேகமா? அப்படி என்ன சந்தேகம் அத்தை?”
“உதய் யாரையோ லவ் செய்றான்னு ரேவதிக்கு சந்தேகமா இருக்காம்...”
சரத் திரு திருவென விழிக்க, துளசி காமாட்சியை ஆராயும் பார்வை பார்த்தாள்.
அவர்கள் இருவரையும் ஒரு நோட்டம் விட்டு விட்டு, “என்ன எல்லோரும் அமைதியா இருக்கீங்க?” என்றாள் காமாட்சி!
“காமாட்சி, ரேவதி தேவையில்லாம யோசிக்குறா! நீ வேற இதுக்கெல்லாம் ஏதாவது சொல்லி அவளை இன்னும் கொஞ்சம் குழப்பாதே...” என்றார் ராஜசேகர்.
“இல்லைங்க, நானும் இப்படி எல்லாம் யோசிக்காதேன்னு அவளுக்கு அடவைஸ் தான் செய்தேன். ஆனாலும் அப்புறம் யோசிச்சு பார்த்தா, அந்த பையன் செய்றதெல்லாமும் சந்தேகமா தான் இருக்கு...”