(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

இருந்தே உனக்கு தெரியலை....”

   

கண்களில் சிரிப்பு மின்ன சொன்ன சுமித்ராவை பார்த்து புன்னகைத்தாள் ஹேமா.

   

“அப்போ நீ இன்னும் லவ் பேஷன்ட் ஆகலை... அந்த ரொம்ப நல்லவர் தப்பிச்சிட்டார்... ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்...”

   

“க்கும்... நானாவது லவ் செய்றதாவது...!!!!”

   

அலுத்துக் கொண்டாலும், தோழியிடம் அப்படி சொல்லிக் கொண்டாலும், அன்று  மருத்துவமனையில் இருந்து கிளம்பும் முன் அவளின் ஃப்ரென்ட் நர்சிடம் பூங்கோதை என்ற பேஷன்டிற்கு இருக்கும் ஒரு வாரத்திற்கான அப்பாயின்ட்மென்ட் நேரத்தை கேட்டு தெரிந்துக் கொள்ள சுமித்ரா தவறவில்லை...

   

❀✿❀✿❀✿

   

அடுத்த நாள் மாலையில், அந்த கண்ணழகனின் அம்மாவிற்கு அப்பாயின்ட்மென்ட் இருந்த நேரத்திற்கு சரியாக தோழியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தாள் சுமித்ரா.

   

எதேதோ சாக்கு சொல்லி, பிசியோதெரபி டாக்டர் இருக்கும் பகுதிக்கு செல்லவும் அவள் தவறவில்லை...

   

அவளை எதிர்பார்த்திருந்தது போல சட்டென விரிந்து மலர்ந்த கண்ணழகனின் முகமும் அவளுக்கு ஏதேதோ செய்தியை சொன்னது...

   

அவர்களின் அந்த ‘சின்ன’ சந்திப்பு என்னவோ ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடந்தது... ஆனால் தொடர்ந்த நேரங்களிலும் அவனின் நினைவு அவளின் மனதை விட்டு விலகவே இல்லை... ஒவ்வொரு வினாடியும் அவளுடனேயே இருந்தது...

   

அழகா... கண்ணழகா என சினிமா பாடலை மாற்றி பாடும் அளவிற்கு அவளை பாதித்திருந்தான் அவன்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.