மருந்து வாங்கிட்டு வரேன்...” என்று சொல்லிவிட்டு அவளின் பதிலுக்கு காத்திராமல் நடந்தான்.
சுமித்ரா அவன் போன திசையையே பார்த்து நின்றிருந்தாள்...
“ஹேய் லூசு... என்னடி சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஷோபனா ரேஞ்சுக்கு லுக் விடுற, என்ன விஷயம்...?”
ஹேமாவை பார்த்து முறைத்த சுமித்ரா,
“ஏண்டி உனக்கு இந்த கெட்ட எண்ணம்?” என்றாள்.
“எனக்கு கெட்ட எண்ணமா? என்ன சொல்ற?” புரியாமல் கேட்டாள் ஹேமா.
“சொல்றதை தான் சொல்ற, இப்படி படத்துல பிரிஞ்சு போற ஜோடியை வச்சு ஏன் சொல்ற, ஏதாவது சக்சஸ் ஆன பட ஜோடியை சொல்லக் கூடாதா?”
“ஹேய்! என்ன நீ? நான் ஏதோ சும்மா விளையாட்டுக்கு சொன்னா, இப்படி எல்லாம் சொல்ற??? ஒழுங்கா நல்ல பொண்ணா இரு...”
“க்கும்...”
“சுமி, இந்த லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் எல்லாம் கதைல தான் வரும்... நிஜ வாழ்க்கைல அதை எல்லாம் பார்க்க முடியாது... உன் கிட்ட இருக்க கொஞ்ச நஞ்ச அறிவையும் காத்துல பறக்க விடாம ஒழுங்கா இரு...”
“ஹேமா, அவர் ரொம்ப நல்லவர்...”
“கீழே விழுந்த பேப்பரை எடுத்துக் கொடுத்ததுல அவ்வளவு தெரிஞ்சிருச்சா உனக்கு?”
“இல்லைடி, என்னை பார்த்து நீங்க டாக்டரான்னு கேட்டார்னா பார்த்துக்கோயேன்... இதுல