“அவ்ளோதானே இந்தா சாவி பிடி தேவையான பணத்தை எடுத்துக்க” என சொல்லி கொத்துசாவியை தர அதை வாங்கியவள் பரவசப்பட்டாள்
”என்னம்மா இது கொத்து சாவியை தர்ற நீயா இது”
”ஏன்டி நான் என்ன உங்கப்பாவை போல கல்நெஞ்சுக்காரியா, எனக்கும் உன் மேல பாசம் இருக்கு ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உன் அப்பாதான் உனக்கு பரிசு தரனுமா என்ன இந்த முறை நான் தரேன், லாக்கர்ல பணம் இருக்கு வேணுங்கறத எடுத்துக்க இஷ்டத்துக்கு செலவு பண்ணு ஜாலியா சந்தோஷமா இரு”
”அம்மா” என அவள் ஆச்சர்யத்தில் அழைத்துக் கொண்டு மீண்டும் தன் தாயை அணைத்துக் கொண்டு விட்டு அவரைப் பார்க்க அவரின் கண்கள் கலங்கியிருந்தது
”என்னம்மா திரும்பவும் கண் கலங்கற என்னதான் பிரச்சனை உனக்கு”
”இன்னும் 20 நாள்ல உனக்கு கல்யாணம், அதை நினைச்சாதான் எனக்கு கவலையாயிருக்கு, கல்யாணம் முடிஞ்சதும் நீ மதுரையிலதான் இருக்கனும்,
அப்புறம் நீ எப்படியிருக்கன்னு நான் எப்படி தெரிஞ்சிக்கறது,
யாரு உனக்கு காலையில ஹீட்டர் போடுவாங்களாம்,
நீ குளிச்சிட்டு வந்த பின்னாடி சுடசுட காபியை யாரு தருவாங்களாம்,
அப்புறம் உனக்கு ஏத்த உடையை யார் எடுத்து வைப்பாங்களாம்,
நீ ரெடியாயிட்டு வந்த பின்னாடி உனக்கு பிடிச்ச டிபன்லாம் அங்க கிடைக்குமா,
என் கைருசியில சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்த பொண்ணு நீ,