Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 02 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சரண்யா இமைக்காமல் எதிரே நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே திவச சடங்குகள் நடந்துக் கொண்டிருந்தன...
அன்றோடு கோபி இறந்து மூன்று வருடங்கள் ஆகி இருந்தன. நினைக்கும் போதே அவளின் மனதில் இப்போதும் சுளீரென்ற வலி தோன்றியது.
கோபி எத்தனை எத்தனை கனவுகள் வைத்திருந்தான்? எவ்வளவு நல்லவன் அவன்! அவனுக்கு ஏன் இப்படி ஒரு முடிவு? அதுவும் அவன் மீது எந்த தவறுமே இல்லாமல் ஏற்பட்ட முடிவு...
எதிர்பக்கம் இருந்த கார் அவன் பக்கம் சீறி வந்த அந்த கடைசி வினாடிகளில் என்ன யோசித்திருப்பான்?
அவனுக்கு ரொம்ப வலித்திருக்குமோ?
சரண்யாவிற்குள்ளே எத்தனை எத்தனையோ கேள்விகள்... கூடவே, ஒரே ஒரு முறை அவனுடன் பேசுவதற்காவது வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம்...
அவளையும் மீறி பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.
சரண்யாவின் பக்கத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு நின்றிருந்த கோபியின் அம்மா கற்பகம் சரண்யா பக்கம் திரும்பி பார்த்தாள்.
கற்பகம் தன் பக்கம் பார்ப்பது புரிந்தாலும் திரும்பி பெரியவளை பார்க்க சரண்யாவிற்கு தயக்கமாக இருந்தது.
மூன்று வருடங்களாகவே கோபியின் மறைவினால் ஏற்பட்ட ரணத்தின் கூடவே அவளை வருத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்ச்சி அப்போதும் அவளுள் எழுந்தது....!
கோபி அவனின் பெற்றோரை பிரிந்து வர அவள் காரணமாக இருந்து விட்டாள்! அன்று அது சரியான முடிவாக தோன்றினாலும், இன்று, இப்போது யோசிக்கும் போது, கொஞ்சம்