தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 23 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கான்ஃபரென்ஸ் ரூமில் இருந்த பெரிய திரையில் அவர்கள் கம்பெனியில் இருக்கும் ஒவ்வொரு துறையின் செயல்பாடு பற்றியும் அநதந்த துறையின் தலைவர் எடுத்து சொல்லும் பவர்பாயின்ட் ப்ரசென்டேஷன் ஓடிக் கொண்டிருந்தது...
நந்திதாவின் கவனம் அதில் இல்லை...
உதய் காதலிக்கிறானா?
நேற்று இரவு முதலே அவளினுள் அதே கேள்வியே ஓடிக் கொண்டிருந்தது...
பார்வையை திரையில் இருந்து மாற்றி அவளுக்கு முன் அமர்ந்திருந்த உதயை பார்த்தாள்...
அவன் மும்முரமாக திரையில் ஓடிக் கொண்டிருந்த ப்ரேசெண்டேஷனை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏனோ அவளால் அவனிடம் இருந்து பார்வையை திருப்ப முடியவில்லை...!
சில நிமிடங்கள் அப்படியே உருண்டோடின....
திடீரென, தன்னுடைய நாற்காலியை பின்னால் நகர்த்தி நந்திதாவின் அருகே வந்த உதய், “என்ன ஆச்சு, போர் அடிக்குதா?” என்றான் மெல்லிய குரலில்.
கொஞ்சம் திகைத்துப் போன நந்திதா,
“இல்லை, இல்லை... பர்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட் எல்லாம் கேட்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு...” என்றாள் திக்கி திணறி...
“அப்போ ஸ்க்ரீனை தானே பார்க்கனும்?”
ஸ்க்ரீனை தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று பொய் சொல்லலாமா என்று யோசித்தவள்,