மனதை மாற்றிக் கொண்டு,
“ரொம்ப நேரமா ஸ்க்ரீனை பார்த்து கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு... ஐ ஆம் சாரி, உங்களையும் டிஸ்டர்ப் செய்துட்டேன்...” என்றாள்.
“தட்ஸ் ஓகே... ஸ்க்ரீனை பார்க்க முடியாத அளவுக்கு இருக்குன்னா, மீட்டிங் ரொம்ப லென்க்த்தின்னு அர்த்தம்...” என்றவன், அவள் பதில் சொல்லும் முன்,
“ஓகே கய்ஸ், சின்ன ப்ரேக் எடுத்துப்போம்... பிஃப்டீன் மினிட்ஸ் கழிச்சு மீட் செய்வோம்,” என்றான்.
மற்றவர்கள் ஒவ்வொருவராக எழுந்து செல்ல, நந்திதாவும் எழுந்து நடந்தாள்.
அவளுடன் வந்து இணைந்துக் கொண்ட உதய், “கேன்டீன் போய் ஒரு கப் காஃபி குடிப்போமா நந்திதா?” எனக் கேட்டான்.
அவள் ஏற்றுக் கொள்ள, இருவரும் கேன்டீன் சென்றார்கள்.
வேண்டியதை வாங்கிக் கொண்டு காலியாக இருந்த ஒரு மேஜையில் அமர்ந்தார்கள்.
“நந்திதா, நீங்க பெர்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட் கவனிக்காம என் பக்கமே பார்த்து ஏதோ யோசிச்சிட்டு இருந்த மாதிரி இருந்தது... என்ன விஷயம்,” என நேரடியாக அவளிடமே கேட்டான் உதய்!
நந்திதா அதிர்ந்து தான் போனாள். ஆனால், ஒரு விதத்தில் உதய் அப்படி அவளிடம் நேரிடையாக கேட்டதும் அவளுக்குப் பிடித்திருந்தது! என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டே,
“அது அது.... அப்படி இல்லை... நத்திங் இம்பார்டன்ட் உதய்...” என்றாள்!
“முக்கியமில்லாத அந்த விஷயம் என்னன்னு என் கிட்ட சொல்லக் கூடாதா?”