“அது அது...”
“நீங்க தடுமாறுறதை பார்த்தால் ஏதோ தாறுமாறான விஷயம் போல இருக்கே...”
“இல்லை அப்படி இல்லை... அஃபிஷியல் விஷயமில்லை... அது தான்... சாரி... ஆஃபிஸ் டைம்ல...”
“கம் ஆன் நந்திதா! ஆஃபிஸ்ல இருக்கும் ஒவ்வொரு செகண்டும் ஆஃபிஸ் விஷயம் பத்தி தான் யோசிக்கனும்னு எந்த ரூலும் இல்லை...”
“பட் ஸ்டில்... மீட்டிங்க்ல...”
“அதெல்லாம் விடுங்க! இப்போதைக்கு மத்த டிபார்ட்மென்ட் எப்படி பெர்ஃபார்ம் செய்யுதுன்னு தெரிஞ்சு நீங்க எதுவும் செய்ய போறதில்லை... உங்க மனசுல இருந்த கேள்வியை சொல்லுங்க...”
“அது வந்து.... வந்து... சாரி உதய்... இது உங்க பர்சனல் மேட்டர்... நேத்து உங்க கல்யாணம் பத்தி வீட்டுல உங்க பெரியம்மா, பெரியப்பா பேசிட்டு இருந்தாங்க...”
“ஓ, ஐ சீ...” என்ற உதயின் கண்களில் இப்போதும் கேள்வி இருந்தது!
சின்ன இடைவெளிக்குப் பிறகு, “நீங்க ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கலைன்னு யோசிச்சிட்டு இருந்தேன்...” என உண்மையை போட்டு உடைத்தாள் நந்திதா.
உதயின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.
“இவ்வளவு தானா? நான் ஏதோ பெரிய விஷயம்னு நினைச்சேன்...! நான் கூட இதே கேள்வியை உங்களை வச்சு யோசிச்சிருக்கேன்,” என்றான் அதே புன்னகை மின்ன!