“வாட்?”
அவளின் அதிர்ச்சியை ரகசியமாக ரசித்துக் கொண்டே, “ஆமாம், நீங்க ஏன் கல்யாணம் செய்துக்காம இருக்கீங்கன்னு யோசிச்சேன்...” என்றான் உதய்.
பார்வையை வேறு பக்கம் திருப்பிய நந்திதா, “அது ஏன்னு... மத்தவங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே...” என்றாள் மெல்லியக் குரலில்.
“யூ மீன் சந்தோஷ்???” என உதய் உடனடியாக வினவவும்,
“ம்ம்ம்...” என தலை அசைத்தாள் நந்திதா.
“கம் ஆன் நந்திதா, அந்த பப்பி லவ்வுக்காக கல்யாணம் செய்துக்காம இருக்கேன்னு சொல்லாதீங்க.”
“அப்படி இல்லை... அந்த கசப்பான அனுபவத்தால கல்யாணம் வேண்டாம்னு இருக்கேன்...”
“ஓ! புரியுது... நானும் கிட்டத்தட்ட அதே மனோபாவத்துல தான் இருக்கேன்.”
உதயின் பதில் நந்திதாவை ஆச்சர்யப்படுத்தியது. “என்ன???” என்றப்போது அவளின் குரலிலும் அந்த ஆச்சர்யம் எதிரொலித்தது.
“நானும் ஒரு பொண்ணை லவ் செய்தேன், இல்லை செய்துட்டே இருக்கேன் நந்திதா... லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்... ஆனால் அவளுக்கு வேற ஒருத்தன் மேல காதலோ காதல்...” என்றான் உதய் அமைதியானக் குரலில்!
“ஓ!”
“அவளோட காதல் நிறைவேறலை... இனிமேலாவது அவ என்னை பார்ப்பான்னு நான் காத்துட்டே இருக்கேன்...”