(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 09 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

“என்ன சுமி... என்ன விஷயம்??? இப்போவாவது என் கிட்ட உண்மையை சொல்...” தோழியை உரிமையுடன் அதட்டினாள் ஹேமா.

   

“எனக்கு ஒன்னும் புரியலை ஹேமா... அவரை பத்தி ஒண்ணுமே தெரியாது... இது எல்லாம் சரி இல்லைன்னும் புரியுது.... ஆனாலும்... நான் சரியான மக்குடி...” என்ற சுமித்ராவின் குரல் தேய்ந்து ஒலித்தது.

   

“அது தான் எனக்கு எப்போவோ தெரியுமே...!”

   

“ப்ச்... போடி... நீ வேற நேரம் காலம் தெரியாமல் ஜோக் அடிச்சிட்டு...”

   

“இங்கே பார் சுமி, நான் சொல்றதை கேளு... அவன் உனக்கு சரியா செட் ஆக மாட்டான்...”

   

சுமித்ரா ஹேமாவை ஒரு பார்வை பார்த்தாள், ஆனால் எதுவும் சொல்லவில்லை! ஹேமாவே தொடர்ந்து பேசினாள்.

   

“உனக்காகவே நேத்து ஈவ்னிங் அவனோட அம்மா கிட்ட பேசினேன்...”

   

“என்ன பேசின?”

   

“பொதுவான விஷயங்கள் தான்... அந்த அவன் அவங்களோட மூத்த மகன்... இன்னும் கல்யாணமாகலை...”

   

“ஓ...!”

   

“சுமி, நீ என் கிட்ட உன் வருங்கால வாழ்க்கை ஆசைகள் பத்தி நிறைய சொல்லி இருக்க... நல்ல பணக்கார குடும்பத்துல உன் வாழ்க்கை அமையனும்... நிறைய பொறுப்புகள் இருக்க கூடாது... ரெடிமேடா செட்டில் ஆகுற வாழ்க்கையா இருக்கனும்... இப்படி நிறைய... நிறைய...”

   

ஹேமா சொல்வது உண்மை என்பதால் இப்போதும் அமைதியாக இருந்தாள் சுமித்ரா!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.