அவளை ஒரே ஒரு கணம் உற்று பார்த்து விட்டு,
“அதை பத்தி எல்லாம் கவலை படாதீங்க... நான் சரியா பேர் வைக்கலைனாலும் என்னோட பெட்டர் ஹாஃப் இதுல கில்லாடி, சூப்பரா பேர் வைப்பாங்க...” என்றான் கமல்.
பெட்டர் ஹாஃப்பா?????
ஹேமா இவனுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சொன்னாளே... அப்படி என்றால், இவன் வேறு யாரையேனும் விரும்புகிறானா???
பெட்டர் ஹாஃப் என்று சொல்லும் போதே இவன் முகத்தில் இப்படி ஒரு எக்ஸ்ட்ரா மலர்ச்சி தெரிகிறதே!!!
சுமித்ராவினுள் கோபம் – வருத்தம் – பொறாமை என கலவையான உணர்வுகள் எழுந்தது...
கமல் மீது கோபம்...
அவன் சொன்ன அந்த பெட்டர் ஹாஃப் மீது பொறாமை...
அவளின் நிலையை நினைத்து வருத்தம்...
சுமித்ரா முகம் மாறிய விதத்தையும் அவள் அமைதியாக நிற்பதையும் சுவாரசியத்துடன் கவனித்த கமல், வேண்டுமென்றே பேச்சை மாற்றினான்.
“ஆமாம் இதிலேயும் ஃபெயில்ன்னு சொன்னீங்களே... வேற எதுல நான் ஃபெயில்??”
சுமித்ரா அவன் ஹாஸ்பிட்டல் வரும் நேரம் பற்றி அவளே விசாரித்து தெரிந்துக் கொள்ள... அவனோ அவனின் அம்மா வேறு ஹாஸ்பிட்டல் போக வேண்டி இருப்பதை பற்றிக் கூட அவளிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லாமல் கொள்ளாமல் சென்றதை தான்