(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

“இது எதுவும் இவன் விஷயத்துல இல்லை சுமி... அவனோட அப்பா சரியில்லை... தம்பி இன்னும் படிச்சிட்டு இருக்கான்... இன்னொரு தங்கை வேற இருக்கா... இவன் தான் இப்போ அந்த குடும்பத்துக்கு தலைவன்... எல்லா பொறுப்பும் அவன் கிட்ட தான் இருக்கு...”

   

ஹேமா பேச்சை நிறுத்தி விட்டு சுமித்ராவை பார்த்தாள்... அவள் இப்போதும் அமைதியாக நின்றிருந்தாள்...

   

“அது மட்டும்மில்லை சுமி, இவன் சரியான சிடு மூஞ்சியும் கூட...”

   

“அப்படியா?”

   

“ஹ்ம்ம்....”

   

“அவன் அம்மாக்கு பட்டிருந்த அடிக்கு ஒரு நாளாவது ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்கனும்... ஆனால் அவங்க என் கிட்ட ஆழாத குறையா கெஞ்சி உடனே டிஸ்சார்ஜ் செய்ய சொல்லுங்கன்னு கேட்டாங்க... இல்லைனா அவங்க மகன் கேர்ஃபுல்லா இருக்க கூடாதான்னு கேட்டு திட்டுவானாம்... அதான் அவங்களுக்காக ஒன்னுமில்லைன்னு சொன்னேன்...”

   

“ஓ...”

   

“எதுக்கு எடுத்தாலும் கணக்கு பார்ப்பானாம்... எரிஞ்சு விழுவானாம்... அவ்வளவு ஏன் அம்மான்னு அவங்க மேல கூட அன்பு, மரியாதை எதுவும் இல்லையாம்...”

   

அதுவரை அமைதியாக இருந்த சுமித்ரா, இப்போது இல்லை என்பது போல தலை அசைத்தாள்...

   

“என்னடி?”

   

“இல்லை ஹேமா அது சரியில்லை... நீ சொன்ன விஷயம் எதுவும் எனக்கு தெரியாது... 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.