(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

ஆனால் அன்னைக்கு அம்மாக்கு அடி பட்டிருச்சுன்னு அவ்வளவு டென்ஷனோட இருந்தவருக்கு அன்பில்லைன்னு சொல்றதை என்னால நம்ப முடியலை....”

   

“என்ன சொல்ற நீ? அவனோட அம்மாக்கு தெரியாதது உனக்கு தெரிஞ்சிருச்சுன்னா??”

   

“அதெல்லாம் எனக்கு தெரியலை ஹேமா... ஆனால் அது உண்மையில்லை...”

   

“சரி, அது பொய்யாகவே இருக்கட்டும்... மத்தப்படி உன் ஆசை, கனவு எதுவுமே மேட்ச் ஆகலையே...”

   

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடி... மாத்திக்கலாம்... நீ சொன்னது வச்சுப் பார்த்தா அவர் ரொம்ப நல்லவர், பொறுப்பானவர்ன்னு எனக்கு தோணுது... ஆனால் அவரோட மனசுல வேற யாரும் இல்லாமல் இருக்கனுமே...”

   

“அதையும் தெரிஞ்சுக்கிட்டா போச்சு...”

   

“எப்படிடி ஹேமா? இனிமேல் எங்கே இருந்து நீ அவரோட அம்மாவை பார்த்து கேட்ப?”

   

“ஹை... இது நல்லா இருக்கே...! உனக்கு வேணும்னா நீ தான் கேட்கனும்... நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ...”

   

“நான் மட்டும் எங்கே போய் கேட்குறது???”

   

“எங்கேயும் போக வேண்டாம்... அங்கே பாரு போதும்...” என்றாள் ஹேமா கேலியாக!

   

சுமித்ரா புரியாமல் விழிக்க, “அங்கே பாருடி....” என்று மீண்டும் சொன்னாள் ஹேமா.

   

அந்த அறையில் இருந்த கண்ணாடி ஜன்னலில் தோழி சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த சுமித்ராவின் முகம் தானாக மலர்ந்தது.

   

கிளினிக்கின் எதிரே இருந்த ரோட்டோரத்தில் நின்றபடி, இரண்டு பக்கமும் யாரையோ 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.