எதிர்பார்ப்பது போல கண்களில் தேடலுடன் நின்றிருந்தான் அவன்... அதே கண்ணழகன் ...!
❀✿❀✿❀✿
“ம்க்கும்...”
பக்கத்தில் சத்தம் கேட்டு திரும்பிய கமலின் கண்கள் அங்கே சுமித்ராவை கண்டதும் சந்தோஷத்தில் விரிந்தன.
“மிஸ்டர் கண்ணழகன் சார், உங்க பேரை சொன்னால் எனக்கு ஈசியாக இருக்கும்,” என்றாள் சுமித்ரா.
கண்ணழகனா!!!!!
இது வரையில் அவனை யாரும் இப்படி செல்ல பெயர் வைத்தெல்லாம் அழைத்ததில்லை...
அது என்னவோ முதல் முறை சந்தித்தது முதலே இவள் அவனுக்கு பிடித்ததையே பேசுகிறாள்... செய்கிறாள்...
முகத்தில் தானாக புன்னகை தோன்ற, அவளின் துடுக்குத்தனத்தை ரசித்துக் கொண்டே, “என் பேர் கமல், உங்க பேர்....” என்று இழுத்தான் அவன்.
“ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் கமல் சார்... முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கிட்ட பேர் கேட்குறீங்க???”
“ஆனாலும் ரொம்ப அநியாயமா இருக்குங்க மிஸ் மோதல் ராணி! நீங்க மட்டும் முன்ன பின்ன தெரியாதவர் கிட்ட பேர் கேட்கலாமா??”
“ஹாங்!!! மோதல்.... ராணியா???? ப்ச் ப்ச் ப்ச்... நீங்க இதிலேயும் ஃபெயில் கமல் சார்... இப்படியா பேர் வைப்பாங்க...? உங்க பசங்க பாவம்...”