“ஓ!”
“இவ்வளவு தானா உங்க ரியாக்ஷன்?”
“அது யாரு அந்த பொண்ணுன்னு என் கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க...”
“ஷுயர்... உங்க கிட்ட சொல்லாமல் வேற யார் கிட்ட சொல்ல போறேன்? உங்களுக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு தான் நான் சொல்ற பொண்ணு...”
அவளுக்கு தெரிந்தவளா??? நந்திதா உதயை கேள்வியுடன் நேராகப் பார்த்தாள்.
அவன் இப்போதும் அதே மனம் மயக்கும் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
இவனுக்கு உதய் என்று பெயர் வைக்காமல் கண்ணன் என்று பெயர் வைத்திருக்கலாம்!!!
“ப்ச்... நந்திதா உங்க ரியாக்ஷன் பார்த்தால் உங்களுக்கு தெரிஞ்சுக்க இன்டரஸ்ட் இல்லைன்னு தோணுது... தட்ஸ் ஓகே, இந்த விஷயம் இப்போதைக்கு பத்திரமா என்னோடவே இருக்கட்டும்! ஓகே, நீங்க கான்ஃபரன்ஸ் ரூம் போங்க, நான் ஒரு கால் செய்துட்டு வரேன்...”
முகத்தில் இருந்த புன்னகை விரிய சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருக்காமல் எழுந்து செல்பவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் நந்திதா.
உதய் காதலிக்கிறானா என்ற கேள்விக்கு பதில் கிடைத்து, யார் அவள்???? யாராக இருக்கும்???? என்ற புதிய கேள்வி நந்திதாவினுள் எழுந்தது!
அந்த நொடியில் எழுந்த அந்த கேள்வி, அப்போது முதல் அவள் மனதை அலைகழித்துக் கொண்டே இருந்தது. மாலையில் வீடு திரும்பிய பின்பும் அவளுள் அதே கேள்வி தான்...
முன் தினம் உதய் காதலிக்கிறானா என்ற கேள்வி என்றால், இன்று யாரை காதலிக்கிறான்